தமிழ்நாட்டில் இன்று மழை பெய்யவிருக்கும் பகுதிகள்!

0
153

உள் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் கடலோர மற்றும் வெளி மாவட்டங்களில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கின்றது.

அதனடிப்படையில், தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் மற்றும் அதனை சுற்றி இருக்கக்கூடிய உள் மாவட்டங்களான திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, அரியலூர், சிவகங்கை, மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

சென்னையை பொருத்தவரையில் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்ஷியஸ் ஆக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Previous articleநகர்புற உள்ளாட்சிகளில் புதிய பேருந்து நிலையம்! தமிழக அரசு வழங்கிய ஒப்புதல்!
Next article27-1-2022- இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!