இந்தியாவுடன் போதும் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் அறிவிப்பு! இந்தப் படை இந்தியாவை சமாளிக்குமா?

Photo of author

By Sakthi

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியதீவுகள் அணி 3 டி 20 கிரிக்கெட் போட்டி மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. பிப்ரவரி 6ம் தேதி முதல் ஒருநாள் தொடர் ஆரம்பிக்க இருக்கிறது. அதன்பின்னர் டி20 போட்டிகள் 16ஆம் தேதி ஆரம்பமாகிறது.

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வீரர்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள், இதில் இங்கிலாந்திற்கு எதிரான 3வது டி20 போட்டியில் 53 பந்துகளில் 10 சிக்சர்களுடன் 107 ரன்கள் அடித்த போவெல் இல்லை என்பது கிரிக்கெட் ரசிகர்களிடம் வியப்பை உண்டாக்கியிருக்கிறது .

கேமர் ரோச் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு மீண்டும் திரும்பியிருக்கிறார், அனுபவம் வாய்ந்த வேகப்பந்துவீச்சாளர் கெமர் ரோச், அதோடு நடுவரிசை பேட்ஸ்மேன் எங்க்ருமா பானர் மற்றும் தொடக்க ஆட்டக்காரர் பிராண்டன் கிங் உள்ளிட்டோர் அணிக்கு திரும்பி இருக்கிறார்கள்.

கீரன் பொலார்ட், கெமர் ரோச்,எங்க்ருமா பானர், பிராண்டன் கிங், பேபியன் ஆலன், டேரன் பிராவோ,ஷமர் ப்ரூக்ஸ், ஜேசன் ஹோல்டர்,அக்கெல் ஹோசன்,அல்ஸாரி ஜோசப்,நிக்கோலஸ் பூரன்,ரொமாரியோ ஸ்மித், ஒடியன் ஷெப்பர்ட்,ஹைடன் வால்ஷ் ஜூனியர் உள்ளிட்டோர் அந்த அணியில் இடம் பிடித்து இருக்கிறார்கள்.

அதேசமயம் டி20 அணி வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படையிருக்கிறது ஒருவேளை போவெல் அதில் தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.