நோய் தொற்று அதிகரித்ததன் காரணமாக, கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் இணையதளம் மூலமாக நடைபெறுமென்று சமீபத்தில் உயர் கல்வித்துறையமைச்சர் பொன்முடி அறிவித்தார்.
அதனடிப்படையில், இன்று முதல் 20ஆம் தேதிக்குள் இணையதளத்தில் தேர்வுகளை நடத்தி முடிக்கவும் உத்தரவு வெளியிடப்பட்டது. அந்த உத்தரவையடுத்து பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரி, உட்பட அனைத்து பல்கலைக்கழகங்கள் கல்லூரிகள் உள்ளிட்டவை செமஸ்டர் தேர்வு அட்டவணையை வெளியிட்டிருந்தது.
அந்த விதத்தில் பொறியியல் படிப்புக்கான தேர்வு இன்று ஆரம்பித்து அடுத்த மாதம் முதல் வாரம் வரையில் ஒவ்வொரு பாட பிரிவுகளுக்கும் வெவ்வேறு விதமாக தேர்வு நடைபெறவுள்ளது.
இந்தத் தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தவிருக்கிறது. அதே போல கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு சென்னை பல்கலைக்கழகம் வருகின்ற 4ஆம் தேதி முதல் தேர்வை நடத்தவிருக்கின்றது. இதேபோல தமிழ்நாடு முழுவதுமிருக்கின்ற ஒவ்வொரு பல்கலைக்கழகங்கள் கல்லூரிகள் உள்ளிட்டவை மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வை நடத்தவிருக்கின்றன.