ராஜேந்திர பாலாஜி கைது கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம்! விழிபிதுங்கிய தமிழக அரசு!

Photo of author

By Sakthi

அதிமுக ஆட்சிக்காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திரபாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக அரசு வேலையை வாங்கி கொடுப்பதாக தெரிவித்து 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டது.

இதனை தொடர்ந்து கடந்த 5ம் தேதி கர்நாடகத்தில் இருந்து ராஜேந்திரபாலாஜியை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தார்கள். அதன் பின்னர் தமிழகத்திற்கு அழைத்து வரப்பட்டு அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

இதுதொடர்பாக வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் முன்ஜாமின் மனு நிலுவையில் இருக்கின்ற சூழ்நிலையில், கைது செய்ததற்கு என்ன காரணம்? என்று கேள்வி எழுப்பியிருக்கிறது.

மதுரையை விடுத்து திருச்சி சிறையில் அடைத்தது எதற்காக? என பல்வேறு கேள்விகளையும் எழுப்பி தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது அதோடு ராஜேந்திரபாலாஜிக்கு நிபந்தனை ஜாமீனும் வழங்கியிருக்கிறது.

இந்த சூழ்நிலையில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மனுவில் மதுரை சிறையில் அடைத்திருந்தால் பார்வையாளர்கள் அதிகம் வருவார்கள்.

பாதுகாப்பு பிரச்சினைகள் ஏற்படுமென்ற காரணத்தால், திருச்சி சிறைக்கு மாற்றியதாக கூறப்பட்டிருக்கிறது. பண மோசடி செய்வதற்கான அனைத்து விதமான ஆதாரங்களும் உள்ளதால் காவல்துறை விசாரணை நடத்தி வருவதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது.