இந்தியாவில் மளமளவென குறைந்த நோய் தொற்று பாதிப்பு! குதூகலத்தில் மக்கள்!

0
148

இந்தியாவில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கொரோனா ஊடுருவியது.இதனைத் தொடர்ந்து அதனை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மத்திய, மாநில, அரசுகள் மேற்கொண்டனர்.

அதன் ஒருபகுதியாக நாடு முழுவதும் முழுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, இதனால் சற்றேறக்குறைய 2 ஆண்டு காலமாக நாட்டில் ஊரடங்கு உத்தரவு தளர்வுகளுடன் அமலிலிருந்து வருகிறது.

இந்த நிலையில், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 83,876 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 195 பேர் நோய் தொற்றால் பலியாகியிருக்கிறார்கள். இதுவரையில் 5,02 ,174 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

நாடுமுழுவதும் நோய் பாதித்த 11,08,938 பேர் சிகிச்சையிலிருக்கிறார்கள். நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 1, 99,054 பேர் குணமடைந்திருக்கிறார்கள்.

நாட்டில் இதுவரையில் 169.63 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 14,70,53 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியிருக்கிறது.

Previous articleநகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! அடுத்தடுத்து கட்டம் கட்டி தூக்கப்படும் அதிமுக வேட்பாளர்கள்?
Next articleஅரசு ஓட்டுனர்களுக்கு இனி இதற்கு தடை! மீறினால் ஒழுங்கு நடவடிக்கை! அரசின் அதிரடி!