பரப்புரையில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின்! திடீரென்று கூட்டத்தில் இருந்து வந்த உதயநிதியை திகைக்க வைத்த அந்த கேள்வி!

0
159

நகர்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

வேட்புமனு தாக்கல் கடந்த 28ம் தேதி தொடங்கி சென்ற 6ம் தேதி முடிவடைந்தது இந்த நிலையில், அதிமுக, திமுக, உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் மிகத் தீவிரமாக இறங்கியிருக்கிறார்கள்.

கரூர் மாவட்டத்தில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு நேற்று கரூர் வேலாயுதம்பாளையம், கிருஷ்ணராயபுரம், குளித்தலை, போன்ற பகுதிகளில் திமுக இளைஞரணி செயலாளர் சேப்பாக்கம் சட்ட சபை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.

கரூர் மாநகராட்சியில் போட்டியிடும் 48 மாநகராட்சி உறுப்பினர்களுக்கு வாக்கு சேகரித்து முடித்துவிட்டு அதன் பிறகு வேலாயுதம்பாளையம் நகராட்சி பகுதியில் பரப்புரை செய்த உதயநிதி ஸ்டாலின் அப்போது அதிமுக அரசு மேற்கண்ட 8 மாதங்களில் செய்து பின்னர் ஒவ்வொன்றாக தெரிவித்து வந்தார்.

அந்த சமயத்தில் திடீரென்று கூட்டத்தில் இருந்த பொதுமக்களில் ஒரு சிலர் குடும்ப அட்டைக்கு மாதம் 1000 ரூபாய் கொடுப்பதாக சொன்னது என்னவானது? என்று கேள்வி எழுப்பினர். திடீரென்று திகைத்து நின்ற உதயநிதி ஸ்டாலின் சட்டென்று சுதாரித்துக்கொண்டு கொடுத்து விடுவோம் இன்னும் 4 ஆண்டுகள் இருக்கிறது என்று தெரிவித்தார்.

Previous articleகுடித்து விட்டு தொல்லை செய்த கணவன்! கோவில் பட பாணியில் தண்டனை வழங்கிய மனைவி!
Next articleநள்ளிரவில் ஏற்பட்ட பதற்றம்! பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு!