திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை! ஆனால் இவர்கள் மட்டும் பள்ளிக்கு வர வேண்டுமாம் மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு!

Photo of author

By Sakthi

கடந்த இரண்டு நாட்களாக டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, உள்ளிட்ட மாவட்டங்களில் மன்னார் வளைகுடா பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, மழை பெய்து வருகிறது.

மேலும் நாகப்பட்டினம், கடலூர், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால், உள்ளிட்ட பகுதிகளிலும் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், தென் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துதிருக்கிறது.

அதனடிப்படையில், திருவாரூரில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்து வருகிறது. தொடர் மழையின் காரணமாக, திருவாரூர் மாவட்டத்தில் இன்றைய தினம் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் காயத்ரி அறிவித்திருக்கிறார். அதோடு திருப்புதல் தேர்வு நடைபெறும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.