இந்தப் பொட்டு வெடிக்கலாம் நாங்கள் பயப்பட மாட்டோம்! கனிமொழிக்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை!

0
142

தமிழகத்தில் பாஜக காலூன்ற வேண்டும் என்று பல வருட காலமாக முயற்சித்து வருகிறது ஆனாலும், அந்தக் கட்சியின் கனவு தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக நனவாகி வருகிறது.

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு 4 சட்டசபை உறுப்பினர்களை பெற்றிருக்கிறது அந்த கட்சி..

அதோடு நான்கு சட்டசபை உறுப்பினர்கள் தான் என்றாலும் கூட ஆளும் கட்சியினருக்கு சிம்மசொப்பனமாக அந்த கட்சியை விளங்கி வருவதாக சொல்லப்படுகிறது.

அதோடு அந்தக் கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன் எதிர்க்கட்சியாக இருக்க கூடிய அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தாலும் எதிர்க்கட்சியான அதிமுக வை மிகக் கடுமையாக விமர்சனம் செய்தது சர்ச்சையை உண்டாக்கியது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது. இதனை முன்னிட்டு திருநெல்வேலி மாநகராட்சி தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அந்த கட்சியின் மாநில மகளிர் அணி செயலாளர் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி திருநெல்வேலியில் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது, மத்திய அரசால் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்த்து நின்று தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்று கொண்டிருக்கிறார் என கூறியிருக்கிறார்.

நீட் தேர்வை அனைத்து தரப்பினரும் எதிர்த்து வருகின்ற சூழ்நிலையில், பாஜக மட்டும் நீட் வேண்டும் என தெரிவித்து வருகிறது. இவர்களுக்கு தமிழக மாணவர்களின் மீது அக்கறை கிடையாது என்பதையே அவர்களின் இந்த செயல் காட்டுகிறது.

கர்நாடக மாநிலத்தில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிய கூடாது என்று தெரிவிக்கிறது. இதன் மூலமாக பாஜக பெண்களை அவமதிக்கும் செயலில் ஈடுபடுகிறது என்று விமர்சனம் செய்திருக்கிறார் கனிமொழி.

தேர்தலில் வழங்கிய வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக முதலமைச்சர் ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார். எல்லா சாதியினரும் மற்றும் மதத்தினரும் ஒற்றுமையாக தமிழகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

தமிழ் நாட்டில் பிரிவினையை ஏற்படுத்திவிடலாம் என்ற கனவுடன் பலர் உள்ளடி வேலைகளை பார்த்து வருகிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார் கனிமொழி.

இந்த மண் பெரியார், அண்ணா, கருணாநிதி, உள்ளிட்டோர் வாழ்ந்த மண் ஸ்டாலின் ஆட்சி செய்யும் இங்கே உங்களுடைய கனவு ஒருபோதும் நிறைவேறாது. எந்த பிரச்சனையாக இருந்தாலும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் குரல் என்னவாக இருக்குமென்று தேசிய அளவில் திரும்பிப் பார்க்குமளவிற்கு மாறியிருக்கிறது.

உள்ளாட்சித் தேர்தலை நடத்த பயந்து கொண்டிருந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு இந்த ஆட்சியை பற்றியும், திமுகவை பற்றியும், முதலமைச்சர் பற்றியும், பேச எந்தவிதமான தகுதியுமில்லை என்று கனிமொழி ஆவேசமாக பேசி இருந்தார் என்று சொல்லப்படுகிறது.

இந்தநிலையில், கனிமொழியின் இந்த பேச்சுக்கு பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுக்கும் விதமாக திருவண்ணாமலையில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது உரையாற்றிய அவர், 8மாத ஆட்சியில் மக்களின் வாழ்வில் எந்தவிதமான விடியலும் ஏற்படவில்லை. பெட்ரோல் குண்டு மட்டுமல்ல ஏவுகணையை வீசினாலும் தமிழகத்தில் பாஜக நிச்சயமாக காலூன்றும் என தெரிவித்திருக்கிறார்.

Previous articleநகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! தேர்தல் ஆணையத்தை வைத்து மறைமுகமாக காய் நகர்த்தும் ஆளும் தரப்பு! கனவுகள் பலிக்குமா?
Next articleமெகா தடுப்பூசி முகாம் திடீர் ரத்து! அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!