தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு உடல் நல குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து அவருடைய மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் உள்ளிட்ட இருவரும் கட்சியை நிர்வகித்து வருகிறார்கள்.ஆனாலும் விஜயகாந்துக்கு கிடைத்தது போன்ற மிகப்பெரிய வரவேற்பு இவர்களுக்கு கிடைக்கவில்லை.
இதன் காரணமாக, அந்த கட்சியின் தொண்டர்களை ஈர்க்கும் விதமாக தன்னுடைய மூத்த மகன் விஜய பிரபாகரனை கட்சிக்குள் கொண்டு வந்தார் பிரேமலதா. அவர் மிகப் பெரிய தலைவர்களையெல்லாம் விமர்சித்து உரையாற்றியது போது போதிய அனுபவமின்றி சற்று தடுமாறித்தான் போனார் என்று தான் சொல்ல வேண்டும்.
இந்த சூழ்நிலையில், பொருளாதாரரீதியாக அந்த கட்சி நெருக்கடிக்கு வந்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில், விஜய பிரபாகரனுக்கும், சுதீஷுக்குமிடையே கருத்து மோதல் உண்டாகி வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
சில முக்கிய சத்துக்கள் சுதீஷ் கையில் இருப்பதாகவும், அதில் சிலவற்றை விற்று செலவு செய்தால் தேமுதிகவை மீண்டும் பலப்படுத்த இயலும் என்று விஜயபிரபாகரன் நம்புகிறாராம். இதில் சுதீஷுக்கு உடன்பாடில்லை என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் அவர்கள் இருவருக்கும் பனிப்போர் நடப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதையெல்லாம் கவனித்த விஜயகாந்த் மற்றும் பிரேமலதா உள்ளிட்டோர் யாருக்கு ஆதரவு தெரிவிப்பது என்று புரியாமல் குழம்பி கொண்டு இருப்பதாகவும், தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால் தொண்டர்கள் கவலையடைந்திருப்பதாக சொல்லப்படுகிறது.