சூப்பர் நியூஸ் குடும்பத் தலைவிகளே! மாதம் 1000 ரூபாய் வாங்க ரெடியா? தயாராகிறது பட்டியல்!

Photo of author

By Sakthi

தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இதற்காக மாநிலம் முழுவதும் அரசியல் கட்சிகள் அனைத்தும் விருவிருப்பான பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஆளுங்கட்சியான திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் ஒருபுறம் பரபரப்பாக செயல்பட்டு வாக்கு சேகரித்து வருகிறது. அதேபோல எதிர்க்கட்சியான அதிமுக ஒருபுறம் விறுவிறுப்புடன் வாக்கு சேகரித்து வருகிறது இதற்கிடையே அதிமுக கூட்டணியில் இருந்து பிரிந்து சென்ற பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, உள்ளிட்ட கட்சிகளும் தனித்தனியே வாக்குகளை சேகரிக்க தொடங்கியிருக்கின்றன.

மேலும் ஆளுங்கட்சியான திமுக இறுதி வெற்றி வாகை சூட வேண்டும் என்று அதிமுக தீவிரமாக முயற்சி செய்து வருகிறது .அதேபோல திமுகவைப் பொறுத்தவரையில் இந்த தேர்தலில் 100 சதவீத வெற்றியை பதிவு செய்ய வேண்டுமென்று அந்த கட்சி மும்முரமாக செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று காரைக்குடி அருகே புதுவயல் மற்றும் கண்டனூர் பேரூராட்சிகளில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பா சிதம்பரம் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது நானும் பணம் அதிகமாக புழங்கிக்கொண்டிருக்கக்கூடிய துறையின் அமைச்சராக இருந்திருக்கிறேன் நிர்வாகத்திடம் பணமில்லை என்பதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.

பொதுமக்களுக்கு செய்யவேண்டிய காரியங்களை செய்ய வேண்டும் என்று மனமிருந்தால் போதும் 6 வருடங்களாக மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் அதிகாரிகளைக் கொண்டு உள்ளாட்சி நடத்தியது அரசியல் சாசனத்தை மீறும் செயல் என்று தெரிவித்திருக்கிறார்.

பா சிதம்பரம் மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது மத்திய நிதியமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அவர் தெரிவித்ததாவது அதிகாரிகள் வர்க்கம் எந்த வேலையும் செய்ய மாட்டார்கள் பணமில்லை, விதியில் இடமில்லை, என்று ஏதாவது ஒரு காரணத்தை தெரிவித்து விடுவார்கள்

.மக்கள் பிரதிநிதிகள் இருந்தால் 10 வேலைகளுக்கு 5 வேலைகள் நடைபெறும் உள்ளாட்சி நடத்தாத அதிமுகவினருக்கு உள்ளாட்சித் தேர்தலில் வாக்கு கேட்க அருகதையில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

முதலமைச்சர் ஸ்டாலின் அமைத்து கொடுத்த மேடையில் நின்று கொண்டு தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்று பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் உரையாற்றி கொண்டிருப்பது வேடிக்கையாகயிருக்கிறது.

திமுகவினர் 9 மாத கால ஆட்சியில் தேர்தல் வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்றியிருக்கின்றார். படிப்படியாகத்தான் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டம் பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும் இதன் அடுத்த கட்டமாக வங்கி கணக்கு சரிபார்க்கப்பட்டு மிக விரைவில் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் நிறைவேற்றப்படும். சட்டசபை தேர்தலில் நம்பிக்கை வைத்து வாக்களித்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் 97 சதவீத இடங்களை கொடுத்ததை போல நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் வாக்காளர்கள் காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.