இந்த ராசிக்காரர்கள் இன்று மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும்!

Photo of author

By Sakthi

இந்த ராசிக்காரர்கள் இன்று மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும்!

Sakthi

Updated on:

மேஷம்

நன்றாக யோசித்து செயல்பட வேண்டிய நாள் அலைச்சல் ஏற்படும் அதற்கேற்ப ஆதாயம் கிடைக்காது நண்பர்களின் ஒத்துழைப்பு குறையும், உதவி செய்ய தயார் என்று சொன்னவர்கள் கடைசி சமயத்தில் கைவிடலாம்.

ரிஷபம்

செலவுகள் அதிகரிக்கும் நாள், நண்பர்களுடன் கருத்துவேறுபாடு உண்டாகலாம், பூர்வீக சொத்துக்களில் பிரச்சனைகள் ஏற்படும் தொலைதூர பயணத்தின் பொழுது எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.

மிதுனம்

அனுபவங்கள் காரணமாக, அற்புதமான பலன் கிடைக்கும் கொடுக்கல்-வாங்கலில் மகிழ்ச்சி ஏற்படும் நண்பர்களுடைய ஒத்துழைப்புண்டு மாலை நேரத்தில் மனதிற்கினிமையான சம்பவம் நடைபெறுவதற்கான வாய்ப்புண்டு.

கடகம்

சேமிப்பு உயரும், சகோதரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் தொலைந்த பொருள் கைக்கு வரும் வருமானம் வரும் வழியைக் கண்டு கொள்வீர்கள். சொத்துக்கள் வாங்கும் முயற்சிகள் கைகூடுவதற்கான வாய்ப்புள்ளது.

சிம்மம்

பயணங்கள் மூலமாக பலன் பெறும் நாள், செல்வந்தர்களின் உதவியுடன் கடன் பிரச்சனைகளை முறியடிப்பீர்கள் பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை கவனமுடன் கையாள வேண்டும்.

கன்னி

தெய்வப் பணிகளில் ஈடுபடுவதற்கான சிந்தனை தோன்றும் திடீர் இடமாற்றங்கள் அச்சத்தை ஏற்படுத்தும் நீண்ட நாளைய வழக்குகள் நல்லதொரு முடிவிற்கு வரும். மருத்துவச் செலவு ஏற்படும் தொழில் பங்குதாரர்கள் தொல்லை கொடுப்பார்கள்.

துலாம்

தொலைபேசி மூலமாக ஆச்சரியம் கொடுக்கும் தகவல் வரும் வாரிசுகள் வழியில் சுப விரயம் ஏற்படும், விலகிச் சென்றவர்கள் வீடு தேடி வருவார்கள் வருங்கால நலன் கருதி புதிய திட்டங்களை தீட்டுவீர்கள்.

விருச்சிகம்

நண்பர்களின் வட்டம் விரிவடையும், பொருளாதார நிலை அதிகரிக்கும் நண்பர்களுடைய ஆதரவுடன் முன்னேற்றமடைவீர்கள் ஆன்மீகத்தின் மீது நாட்டம் செல்லும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பாக சிந்திப்பீர்கள்.

தனுசு

எதையும் சாமர்த்தியமாக பேசி சமாளிக்கும் நான், மாணவர்களின் சந்திப்பு கிடைக்கும் குடும்பத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான அறிகுறிகள் தென்படலாம். வாரிசுகளின் நலன் கருதி செலவு செய்வீர்கள்.

மகரம்

உங்களுடைய செல்வாக்கு உயரும் நாள், திடீர் பயணம் தித்திக்க வைக்கும் நண்பர்களுடைய ஒத்துழைப்புடன் நற்காரியங்களை நிறைவேற்றுவீர்கள் விலகியிருந்த உறவினர்கள் விரும்பி வந்து சேர்வார்கள்.

கும்பம்

இன்று தங்களுக்கு யோகமான நாள், திட்டமிட்ட காரியங்கள் சிறப்பாக நடக்கும் உறவினர்கள் போற்றும் விதத்தில் நடந்து கொள்வீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம். வரவேண்டிய பாக்கிகள் அனைத்தும் வசூலாகும்.

மீனம்

சில முக்கிய நபர்களை சந்தித்து முடிவெடுக்க வேண்டிய நாள், தொழில்ரீதியாக எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்கும் பணப்புழக்கம் சரளமாக இருக்கும். உத்தியோகத்தில் பணிநிரந்தரம் தொடர்பான தகவல் வந்து சேரலாம்.