உக்ரைன் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கிடையே கடந்த 24ஆம் தேதி முதல் கடுமையான போர் நிலவி வருகிறது.அதாவது சற்றேறக்குறைய ஒரு மாத காலமாகவே உக்ரைன் நாட்டு எல்லையில் ரஷ்யா தன்னுடைய ராணுவ நிலைகளை நிறுத்தி வைத்தது. இதற்கு அமெரிக்க தரப்பில் கடுமையான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது.
மேலும் அமெரிக்க மக்கள் அனைவரும் உடனடியாக உக்ரைனிலிருந்து வெளியேற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.இந்த நிலையில், கடந்த 24 ஆம் தேதி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் திடீரென்று உக்ரைன் மீது போர் தொடுத்தார்.
இதனால் அங்கே பதற்றம் நிலவியது ஆகவே அங்கிருக்கும் இந்தியர்களை பத்திரமாக மீட்கும் பணியில் மத்திய அரசு துரிதமாகச் செயல்பட்டதும் அதாவது உக்ரைன் நாட்டிற்கு செல்ல முடியாத சூழ்நிலையில், உக்ரைன் நாட்டின் அண்டை நாடுகளின் உதவியுடன் உக்ரைனிலிருக்கும் இந்தியர்களை மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டது. ஆபரேஷன் கங்கா என்ற திட்டத்தின் மூலமாக தற்போது வரையில் அங்கு சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகிறார்கள்.
அதோடு ரஷ்யாவிற்கு இந்தியா நெருங்கிய நட்பு நாடு என்ற காரணத்தால் இந்தியர்கள் சுலபமாக அங்கிருந்து வெளியேற முடிந்தது ஆனால் உக்ரைன் ராணுவத்தினர் மற்றும் உக்ரைன் குடிமக்கள் உள்ளிட்டோர் இந்தியர்களை அங்கிருந்து வெளியேற விடாமல் சற்றே குடைச்சல் கொடுக்கத் தொடங்கினார்கள்.
இது ஒருபுறமிருக்க இந்திய மாணவர்கள் மற்றும் இந்திய மக்கள் அனைவரும் இந்திய தேசியக் கொடியை கையில் ஏந்திக்கொண்டு அந்த நாட்டின் எல்லையை கடந்து அருகிலுள்ள நாடுகளுக்கு எந்தவிதமான பயனுமின்றி செல்ல வேண்டும் என்று உக்ரைனிலிருக்கக்கூடிய இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்தார்கள்.
அதுபோல பலர் உக்ரைன் நாட்டு எல்லையை கடந்து வந்தார்கள் இதனை கண்ட மற்ற நாட்டு மக்களும் இந்திய கொடியை ஏந்தி கொண்டு அங்கிருந்து வெளியேறத் தொடங்கினார்கள்.இந்தநிலையில், உக்ரைன் மீது ரஷ்யா இன்றும் 14 ஆவது நாளாக போர் தொடுத்து வருகின்றது உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷ்ய படைகள் அந்த நாட்டின் தலைநகரை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன.
இதனால் உக்ரைன் படைகளுக்கும், ரஷ்ய படைகளுக்குமிடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் ரஷ்யாவின் தரப்பில் பாதுகாப்பு படையினர், உக்ரைன் தரப்பில் பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் என்று 2 தரப்பிலும் ஆயிரக்கணக்கான நபர்கள் பலியானார்கள்.
ஆனாலும் இந்த போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று ஐநா சபை முதல் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரையில் பலர் கோரிக்கை வைத்தும் அதனை ரஷ்யா ஏற்க மறுத்துவிட்டது. ஆனாலும் இன்னமும் அதற்கான முயற்சிகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது அந்த முயற்சியின் பலனாக உக்ரைனில் சில பகுதிகளில் தற்காலிகமாக போரை நிறுத்துவதாக ரஷ்யா தெரிவித்திருக்கிறது.
இதற்கு நடுவில் போர் நடைபெற்று வரும் சூழ்நிலையில், உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மத்திய அரசு மீட்டு வருகிறது ஆபரேஷன் கங்கா என்ற பெயரில் இந்த மீட்பு நடவடிக்கை தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த மீட்பு நடவடிக்கை மூலமாக ஆயிரக்கணக்கான இந்தியர்கள் உக்ரைனிலிருந்து மீட்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த சூழ்நிலையில், உக்ரைனில் சிக்கியிருந்த பாகிஸ்தானை சார்ந்த ஆஷ்மா சபிக்யூ என்ற பெண்ணை இந்தியா மீட்டு வந்தது தன்னை மீட்டதற்காக உக்ரைன் தலைநகரிலிருக்கும் இந்திய தூதரகத்திற்கும் , இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும், பாகிஸ்தான் பெண் நன்றி தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து பாகிஸ்தானை சார்ந்த அந்த பெண் தெரிவிக்கும்போது, வணக்கம் என் பெயர் ஆஸ்மா ஷபிக்யூ நான் பாகிஸ்தானை சார்ந்தவள் உக்ரைனில் மிகவும் கடுமையான சூழ்நிலையில் சிக்கித் தவித்த என்னை மீட்பதில் உதவி புரிந்த உக்ரைன் தலைநகர் கீவ்விலுள்ள இந்திய தூதரகத்திற்கும், இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கும், நான் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
எங்களை ஆதரித்ததற்க்கு நன்றி இந்திய தூதரகத்தால் நான் நிச்சயம் பாதுகாப்பாக என்னுடைய வீட்டிற்கு செல்வேன் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார் அந்தப் பெண்மணி.