தொடக்கத்திலிருந்தே அதிமுக மற்றும் திமுகவை மிகக் கடுமையாக விமர்சனம் செய்த கட்சி பாஜக ஆனால் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்த போது அதிமுகவை பற்றி பெரிதாக அந்தக் கட்சி விமர்சனத்தை முன் வைக்கவில்லை.
ஆனாலும் சட்டசபையில் பாஜகவின் குழு தலைவர் நயினார் நாகேந்திரன் சட்டசபையில் பாஜக மட்டுமே ஆண்மையுடன் செயல்படுகிறது என்று தெரிவித்ததன் அடிப்படையில், இதற்கு அதிமுகவினர் கடுமையான கண்டனங்களை பதிவு செய்தார்கள்.
ஆனாலும் கூட அதிமுக மீது பாஜகவிற்கு தனி பாசமிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும் இருந்தாலும் திமுகவிற்கு எதிராக கடுமையான கருத்துக்களை பல இடங்களில் பாஜக தெரிவித்து வருகின்றது.
இந்த நிலையில், தமிழக அரசு மூன்று கோடி ரூபாய் மீட்புப் பணிக்கு செலவு செய்திருப்பது அமைச்சர்கள் டெல்லி சென்று பஜ்ஜி சாப்பிட்ட செலவுதான் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மண்டைக்காட்டில் தெரிவித்திருக்கிறார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் மாசி கொடை விழாவில் ஒடுக்கு பூஜையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்று கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
இதனைத் தொடர்ந்து ஹைந்தவ இந்து சேவா சங்கம் சார்பாக நடைபெற்ற சமய மாநாடு நிகழ்ச்சியில் பங்கேற்று கொண்டு ஏழைகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.
மேலும் அப்போது பேசிய அவர் ஒரே சமயத்தில் ரஷ்யா, உக்ரைன் உள்ளிட்ட அதிபர்களிடம் பேசிய ஒரே பிரதமர் நரேந்திர மோடி தான் மோடியை எதிர்க்க பிரதமர் ஆசையுடன் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், மம்தா பானர்ஜி, ராகுல் காந்தி, உள்ளிட்டோர் கும்பலாக கிளம்பியிருக்கிறார்கள் என்று கிண்டல் செய்தார்.
உக்ரைனில் சிக்கி தவிக்கும் மாணவர்களை அரசு மீட்டு வரும் நிலையில் தமிழக அரசு 3 கோடி ரூபாய் மீட்புப் பணிக்கு செலவு செய்திருப்பது அமைச்சர்கள் டெல்லிக்கு சென்று பஜ்ஜி சாப்பிட்ட செலவுதான் என்று தெரிவித்திருக்கிறார்.