உக்ரைன் நேட்டோ அமைப்பில் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் கடந்த 24ஆம் தேதி அண்டை நாடான ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்தது.இதற்கு முன்பாகவே உக்ரைன் நாட்டு எல்லையில் ரஷ்யா தன்னுடைய ராணுவ நிலைகளை நிறுத்தி வைத்திருந்தது. இதற்கு அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், கடந்த 24ஆம் தேதி யாரும் எதிர்பாராத விதத்தில் திடீரென்று உக்ரைன் மீது போர் தொடுக்கும் அறிவிப்பை வெளியிட்டார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின்.
இதன் காரணமாக, ரஷ்யா தரப்பில் பல ராணுவ வீரர்கள் பலியானார்கள், உக்ரைன் தரப்பில் ஒரு ராணுவ வீரர்களும் பொதுமக்களும் பலியானார்கள்.
மேலும் ரஷ்யப் படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உக்ரேனில் படித்துக்கொண்டிருந்த கர்நாடகத்தைச் சேர்ந்த அரவிந்த் என்ற மாணவர் பலியானார் இதற்கு இந்திய தரப்பில் கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டது மேலும் ரஷ்யா தூதரகத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கிடையே வளாகத்தில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் எந்தவிதமான தீர்வும் எட்டப்படவில்லை.
ஆகவே மறுபடியும் துருக்கியில் இது தொடர்பான பேச்சுவார்த்தை இரு நாடுகளுக்கிடையே நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படாததன் காரணமாக, ரஷ்யா மிகுந்த கோபம் அடைந்து விட்டது.
இதனால் உக்ரைன் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு இடையே நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. ரஷ்ய படைகள் முக்கிய நகரங்களில் ஏவுகணை, வான் தாக்குதல்கள், பீரங்கித் தாக்குதல், உள்ளிட்டவற்றை நிகழ்த்தி வருகின்றன.
அதே சமயத்தில் ரஷ்யாவிற்கு உக்ரைனும் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இதற்கிடையில் போர்நிறுத்தம் தொடர்பாக உக்ரைன் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு இடையே 3-வது கட்ட அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் நிலைமை மேலும் சிக்கலாகி விட்டதாக தெரிகிறது.
இதனால் ரஷ்யா தன்னுடைய தாக்குதலை உக்ரைன் மீது மறுபடியும் தீவிரப்படுத்தி இருக்கிறது. உக்ரைன் தலை நகரை ரஷியப் படைகள் நெருங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கீவ் நகருக்கு அருகில் 64 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரஷ்யப் படைகளின் ராணுவ வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன என்பதை மாக்ஸர் டெக்னாலஜி நிறுவனம் எடுத்த செயற்கைக்கோள் புகைப்படங்கள் உறுதிப்படுத்துவதாக சொல்லப்படுகிறது.