மீனாட்சி திருக்கல்யாண வரலாறு என்னவென்று தங்களுக்கு தெரியுமா?

0
364

மீனாட்சிக்கு திருமணம் என்று சொன்னவுடன் மதுரை மாநகரமே விழாக்கோலம் இந்த நாட்டின் அரசுக்கு திருமணம் என்றால் சாதாரண விஷயமா? மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்திருந்தார்கள்.

திருமணத்திற்கு நாள் குறித்து அன்றைய தினம் மணமகள் மீனாட்சியின் முகத்தில் வெட்கம் கரைபுரண்டு ஓடியது. தன்னுடைய மணவாளனை முதன் முறையாக சந்தித்த அனுபவம் அப்போது அவளை சிலிர்ப்புக் கொள்ள வைத்தது.

எட்டுத்திக்கும் வெற்றிபெற்று இமயத்தையும் வென்று வர சென்றபோதுதான் சிவபெருமானை முதன்முதலாக சந்தித்தார் மீனாட்சி. சிவபெருமானின் பார்வை பதிந்த நொடியில் அவருடைய 3 தனங்களில் ஒன்று மறைந்து போயிற்று.

அப்போதுதான் தன்னுடைய மணவாளனை நினைத்து பார்த்தார்.  மீனாட்சியை ஒரு நல்ல நாளில் பூலோகம் வந்து மணந்து கொள்வதாக சிவபெருமான் உறுதியளித்ததை தற்போதும் நினைத்துப் பார்த்து மகிழ்ச்சியடைந்தாள். அப்போது அவள் ஆவலுடன் எதிர்பார்த்த சிவபெருமான் வந்து கொண்டிருந்தார்.

சிவபெருமானுடன் பிரம்மா, விஷ்ணு மற்றும் தேவர்கள், தேவகணங்களும் வந்து சேர்ந்தார்கள். புலித்தோலை ஆடையாகவும் பாம்புகளை அணிகலன்களாக அணிந்து கொண்டு காட்சிதரும் சிவபெருமான் அந்த கோலத்தில் இருந்து மாறியிருந்தார்.

சுந்தரேஸ்வரராக, மதுரை மாப்பிள்ளையாக, வருகை தந்தார். பங்குனி உத்திர நாளில் நல்ல நேரம் வந்தவுடன் மீனாட்சியின் கழுத்தில் மாங்கல்யத்தை அணிந்து மனைவியாக ஏற்றுக் கொண்டார் சிவபெருமான்.

திருமணம் முடிவடைந்தவுடன் தடபுடலாக விருந்து நடைபெறுமல்லவா அது மீனாட்சியின் திருமணத்திலும் நடைபெற்றதாம் அதேபோல மலைபோல் சாதம் சமைக்கப்பட்டது. அதில் ஒரு பகுதி மட்டுமே காலியாகியிருந்தது.

இதனை அறிந்து கொண்ட மீனாட்சி அதுதொடர்பாக தன்னுடைய கணவர் சிவபெருமானிடம் தெரிவித்தார். சாதம் பலகாரங்களை சாப்பிடுமாறு அவர்களை பணிவுடன் கேட்டுக் கொண்டார். அவர்கள் இருவரும் அடுத்த சில நிமிடங்களிலேயே அத்தனை உணவுகளையும், பலகாரங்களையும், மிக வேகமாக தின்று தீர்த்து விட்டார்கள்.

தாகத்தை தணிக்க மிகப்பெரிய அண்டாக்களில் இருந்த தண்ணீரை எடுத்து குடித்தார்கள் பெரிய அண்டாக்கள் அனைத்தும் அவர்களுக்கு சிறிய டம்ளர்களை போல காட்சி அளித்தனர். அந்த தண்ணீர் அவர்களுக்கு போதுமானதாக இல்லை என்று சொல்லப்படுகிறது.

தாகம், தாகம், என்று கூக்குரல் எழுப்பினர். அப்போது சிவபெருமான் தன்னுடைய கையை வைத்து அங்கு ஒரு சிறிய நதியை ஏற்படுத்தினார். அந்த நதியின் நீரை குடித்து குண்டோதரர்கள் தாகத்தை தீர்த்துக்கொண்டனர். சிவபெருமான் தன்னுடைய கையை வைத்து உருவாக்கியதால் அந்த நதி வைகை என்று பெயர் பெற்றது இதுதான் மீனாட்சி திருக்கல்யாண வரலாறு என்றும் சொல்லப்படுகிறது.

Previous articleநீங்கள் இந்த ராசியா? இன்று உங்களுக்கு காரிய வெற்றி உண்டு!
Next articleவிழுப்புரம் மாவட்ட சுகாதார சங்கத்தில் பணிபுரிய விருப்பமா! இப்போதே விண்ணப்பியுங்கள்!