தமிழகத்தில் 17 மாவட்டங்களில் நோய் தொற்று பாதிப்பு ஒருவருக்கு கூட இல்லை!

0
148

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் தனி தீவிரமாக நடைபெற்று வருகிறது தமிழ்நாடு முழுவதும் தடுப்பூசி முகாம் நடத்தி தமிழகம் முழுவதும் லட்சக் கணக்கானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இதனால் வெகுவாக தமிழகத்தில் நடைபெற்று பாதிப்பு குறைந்து வருகிறது அதோடு பல மாவட்டங்களில் ஒருவருக்குக்கூட நோய்த்தொற்று பரவில்லை என்ற சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் நேற்றைய நோய் தொற்று பாதிப்பு தொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 37,357 பேருக்கு நோய் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 34 ஆண்களும், 36 பெண்களும், என்று ஒட்டு மொத்தமாக 70 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

அதிலும் அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் 20 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 11 பேரும், பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். குறைந்தபட்சமாக காஞ்சிபுரம், கோவை உட்பட 19 மாவட்டங்களில் 5க்கும் குறைவான அளவில் மட்டுமே நோய்தொற்று காரணமாக, பாதிப்படைந்து வருகிறார்கள்.

அதோடு கடலூர், அரியலூர், கரூர், திண்டுக்கல், மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, பெரம்பலூர், சிவகங்கை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவாரூர் நெல்லை ,திருப்பூர், திருச்சி, விழுப்புரம், உள்ளிட்ட 17 மாவட்டங்களில் ஒருவருக்குக்கூட நோய் தொற்று பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

இதில் 12 வயதிற்குட்பட்ட 18 குழந்தைகளுக்கும், 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் 13 பேருக்கும், நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரையில் 6,39,80,277 நபர்களுக்கு நோய்த்தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதில் 34,52,215 நபர்களுக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் நேற்றைய நிலவரத்தின் அடிப்படையில் 190 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் 92 பேர் ஆக்சிஜன் வசதி கொண்ட பிரிவுகளிலும், 20 பேர் தீவிர சிகிச்சை பிரிவிலும், சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் நேற்று நோய்தொற்று பாதிப்பால் கடலூர் மாவட்டத்தைச் சார்ந்த 78 வயது முதியவர் ஒருவர் பலியானார் 37 மாவட்டங்களில் உயிரிழப்பு எதுவும் நிகழவில்லை என்று சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டில் இதுவரையில் ஒட்டுமொத்தமாக 38,025 பெயர் நோய் தொற்று காரணமாக, பலியாகியிருக்கிறார்கள். இந்த நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து நேற்று 146 பேர் விடுபட்டிருக்கிறார்கள்.. அதோடு 796 பேர் சிகிச்சையிலிருப்பதாக சொல்லப்படுகிறது.

Previous articleஅட நீ என்னய்யா சொல்றது அதெல்லாம் முடியாது! சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்க மறுத்த ரஷ்யா
Next article‘மன்கட்’ முறை அவுட்! வரவேற்றுள்ள அஸ்வின்!!