கட்சித் தலைமைக்கு அதிர்ச்சியளித்த அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்கள்!

0
99

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுகவில் பல்வேறு குளறுபடிகள் நிகழ்ந்தனர்.ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட பன்னீர்செல்வம் சசிகலாவின் கட்டாயம் காரணமாக, அந்த பகுதியை ராஜினாமா செய்துவிட்டு தர்ம யுத்தத்தை தொடர்ந்தார்.

அதன் பிறகு நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகள் மூலமாக பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, உள்ளிட்டோர் ஒன்றாக இணைந்து அதிமுகவின் பொதுச் செயலாளர் என்ற பதவியை நீக்கினார்கள். அவ்வாறு நீக்கப்பட்ட அந்த பொதுச்செயலாளர் பதவிக்கு பதிலாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், உள்ளிட்ட பதவிகள் ஏற்படுத்தப்பட்டன.

அதன்படி ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸ் அவர்களும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அவர்களும், நீடித்து வருகிறார்கள்.

அவ்வாறு இந்த பதவிகள் உருவாக்கப்பட்டது அதிமுகவின் சட்டதிட்டங்களுக்கு எதிரானது என்று தெரிவித்து கட்சி உறுப்பினர்களான வழக்கறிஞர் ராம்குமார், ஆதித்தன், பழனிச்சாமி, உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்கள்.

ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை ஏற்படுத்தி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும், சென்ற வருடம் டிசம்பர் மாதத்தில் நடத்தப்பட்ட உட்கட்சி தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவின் கட்சி விதிகளில் மாற்றம் செய்யப்பட்டிருப்பது தவறு மாற்று கட்சிகளுக்கு செல்லாமல் 5 வருடங்களாக கட்சியில் உறுப்பினர்களாக இருப்பவர்களை கொண்டு வாக்காளர் பட்டியல் தயாரித்து அதிலிருந்து ஒருவரை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுச்செயலாளரின்றி பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட கட்சி விதிகளில் திருத்தம் கொண்டு வர தடை விதிக்க வேண்டும், அதோடு இதுகுறித்து அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் என்ற அடிப்படையில் கட்சி நிர்வாகிகளை எதிர்த்து வழக்கு தொடர அனுமதி வழங்கவேண்டும் என்று தெரிவித்திருந்தார்கள்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனு குறித்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, உள்ளிட்டோர் 4 வாரங்களுக்குள் பதில் வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.