சரக்கு ஏற்றுமதியில் சாதனை இலக்கை அடைந்த இந்தியா! பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்!

0
119

கடந்த 2014ஆம் ஆண்டு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஒரு பெற்றதிலிருந்து பலவிதத்தில் முன்னேற்றமடைந்து வருகிறது என்றுதான் சொல்லவேண்டும்.

குறிப்பாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு தான் உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் செல்வாக்கு உயர்ந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. இன்னும் சொல்லப்போனால் உலகளாவிய பல முக்கிய முடிவுகளை மேற்கொள்ளும் போது அனைவரும் பிரதமர் நரேந்திர மோடி என்ன சொல்கிறார் என்று உன்னிப்பாக கவனிக்கிறார்கள்.

இந்தியாவின் இந்த மாபெரும் வளர்ச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி தான் காரணம் என்று பாஜக பலமுறை தெரிவித்து வந்தது. கட்சி ரீதியாக தன்னுடைய தலைவருக்காக அந்த கட்சி இவ்வாறு தெரிவிக்கிறது என்று நாம் எடுத்துக் கொண்டாலும் அதுவே உண்மையாகவும் இருந்து வருகிறது.

உலக அரங்கில் தைரியமாக இந்தியா பல சாதனைகளை புரிந்தது பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற பின்னர் தான் என்று சொல்லப்படுகிறது.அதோடு பொருளாதார வளர்ச்சியும் சற்றே அதிகரித்திருக்கிறது என சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டிருக்கின்ற செய்திக்குறிப்பில் நான் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் சரக்கு ஏற்றுமதி என்ற இலக்கை இந்தியா முதன்முறையாக எட்டி சாதனை படைத்திருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த இலக்கை இந்தியா எட்டுவதற்கு முக்கிய காரணமாக, இருந்த விவசாயிகள், நெசவாளர்கள், எம் எஸ் எம் இக்கள், உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்களுக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன். நம்முடைய ஆத்ம நிர்பர் பாரத் பயணத்தில் இது முக்கிய மைல்கல் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

Previous articleஅவ்வாறு ஒரு நிலை ஏற்படுமானால் நிச்சயமாக நாங்கள் அணு ஆயுதத்தை பயன்படுத்தியே தீருவோம்! ரஷ்யா பகிரங்க எச்சரிக்கை!
Next articleஏலத்தில் பல லட்சத்திற்கு விலை போன ஆடை!