டெல்லி சட்டசபையில் இன்று இந்த வேடத்திற்காக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார்! அந்த மாநிலத்தின் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா!

0
135

தமிழக சட்டசபையில் சென்ற வாரம் இந்த நிதி ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது இதில் பல்வேறு திட்டங்களுக்கு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. தற்சமயம் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.அதோடு வேளாண்மை துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை 2வது முறையாக தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், டெல்லி சட்டசபையில் இன்று நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. டெல்லி துணை முதலமைச்சரும், டெல்லியின் அமைச்சரவையில் நிதி துறை அமைச்சருமான மணிஷ் சிசோடியா இந்த நிதியாண்டிற்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்யவிருக்கிறார். முன்னதாக டெல்லி சட்டசபையில் நிதிநிலை கூட்டத்தொடர் கூட்டம் சென்ற 23ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

பட்ஜெட் தாக்கல் செய்ததற்கு பிறகு இந்த நிதியாண்டுக்கான மாநிலங்களுக்கான கோரிக்கை உள்ளிட்டவற்றை அவர் 2021- 2022 நிதியாண்டுக்கான மாநிலங்களுக்கான துணை கோரிக்கைகளை முன்வைத்து பேசுவார் என்று சொல்லப்படுகிறது. தொடர்ந்து மணீஷ் சிசோடியா டெல்லி ஒதுக்கீட்டு மசோதா 2022 அறிமுகப்படுத்துவார் என சொல்லப்படுகிறது.

Previous articleதோனிக்கு பாப் டு பிளஸ்சிஸ், சேவாக் ஆகியோர் புகழாரம்!
Next articleஇலங்கையின் பொருளாதார சிக்கல்! மீண்டும் கிங்மேக்கர் ஆகும் தமிழர்கள்!