ஹவுதி கிளர்ச்சியாளர்களின் அட்டகாசம்! சவுதியில் கொழுந்து விட்டெரியும் எண்ணெய் கிடங்கு!

0
110

சவுதி அரேபியாவின் மிகப்பெரிய மற்றும் அரசு எண்ணெய் நிறுவனமான அராம்கோவின் எண்ணெய் கிடங்குகளை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியதாக தகவல் கிடைத்திருக்கிறது.ஜூடா என்ற நகரில் அமைந்திருக்கின்ற அராம்கோ எண்ணெய் நிறுவனத்தின் எண்ணெய் கிடங்குகளில் நேற்று பயங்கர தீ விபத்து உண்டாகியிருக்கிறது.

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ட்ரோன் தாக்குதல் காரணமாக எண்ணெய் கிடங்குகளில் தீ பரவியதாக சொல்லப்படுகிறது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படையைச் சேர்ந்தவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் உயிரிழப்பு ஏதாவது உண்டாகி இருக்கிறதா என்பது தொடர்பாக இதுவரையில் எந்தவிதமான தகவலும் வெளியாகவில்லை.

தாக்குதல் நடைபெற்ற பகுதிக்கு அருகே சர்வதேச கார் போர்டிகோவில் முதன்மையான பார்முலா 1 கார் போட்டி நடைபெறுவதாக இருந்தது இந்த தாக்குதல் சம்பவம் காரணமாக, பார்முலா 1 கார் போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி தலைமையிலான அரச படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்குமிடையே கடந்த 2015 ஆம் வருடம் முதல் போர் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleநாட்டில் திடீர் நோய்த்தொற்று பலி எண்ணிக்கை உயர்வு! காரணம் என்ன?
Next articleமாநிலங்களவையில் கதறியழுத பாஜகவின் பெண் எம்பி! காரணம் என்ன?