ஐபிஎல் தொடரில் மோசமான சாதனை புரிந்த ஹைதராபாத் அணி!

0
110

ராஜஸ்தான் ராயல்ஸ் ஹைதராபாத் ஐபிஎல் தொடரின் 5வது ஆட்டம் நேற்றைய தினம் நடந்தது முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் சேர்த்தது. சஞ்சு சாம்சன் 55 ரன்களும், தேவ்தத் படிக்கல் 41 ரன்களும் சேர்த்தனர்.

அடுத்ததாக களமிறங்கிய ஹைதராபாத் அணி தொடக்கம் முதலே திணறியது கேன் வில்லியம்சன் 2 ரன்னில் வெளியேறினார். ராகுல் திரிபாதி, நிக்கலஸ் பூரன் உள்ளிட்டோர் டக்கவுட்டானார்கள். இதன் காரணமாக, பவர் பிளேவனா முதல் 6 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 14 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது அந்த அணியால்.

மேலும் இது ஐபிஎல் சீசனில் பவர் பிளேயில் எடுத்த மிகவும் குறைந்த ரன் என்று சொல்லப்படுகிறது. 2009ஆம் வருடம் நடந்த ஐபிஎல் தொடரில் ஆர்எஸ்சிபி அணிக்கு எதிராக ராஜஸ்தான் அணி அவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 14 ரன்கள் எடுத்திருந்தது பவர் பிளேயில் குறைவான ரன்கள் எடுத்த அணிகளின் விபரம் வருமாறு-

2022 – ஐதராபாத் – 14/3, எதிரணி – ராஜஸ்தான்

2009 – ராஜஸ்தான்-14/2, எதிரணி – ஆர்சிபி

2011 – சென்னை -15/2, எதிரணி – கொல்கத்தா

2015 – சென்னை – 16/1, எதிரணி – டெல்லி

2019 – சென்னை -16/1, எதிரணி- ஆர்சிபி

Previous articleரயில்வேயில் வேலை பார்க்க விருப்பமா? இணையதளத்தில் விண்ணப்பிக்க ரெடியா இருங்க!
Next articleராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டது சரியா? அல்லது தவறா?