எனக்கு பாடம் நடத்த வேண்டாம் முதலில் இதை சரி செய்யுங்கள்! நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் அதிரடி பதில்!

0
117

சமீபத்தில் உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் நடைபெற்று முடிந்தது இந்த தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தை தவிர்த்து மற்ற 4 மாநிலங்களிலும் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது.

இந்தத் தேர்தல் நடைபெற்ற முடியும் வரை பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை அதிலும் கச்சா எண்ணெயின் விற்பனையில் இரண்டாம் இடம் வகிக்கும் ரஷ்யா மற்றும் உக்ரைன் உள்ளிட்ட நாடுகளிடையே கடுமையான ஒரு பதற்றம் நிலவி வந்தது அதோடு ரஷ்யாவின் மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்தனர்.

மேலும் கச்சா எண்ணெயின் விலை நிலவரமும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு அதிகரித்தது அப்போது கூட இந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்படவில்லை.ஆனால் தற்போது மீண்டும் இந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்திருக்கிறது.இந்த நிலையில், மாநிலங்களவையில் நிதி மசோதா மீதான விவாதத்திற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது ரஷ்யா மற்றும் உக்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்கிடையேயான பல நாட்களாக நடைபெற்றாலும் இப்போதுதான் இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களின் விலை அதிகரிக்க படுவதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்து வருகிறார்கள் இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான தகவல் என தெரிவித்திருக்கிறார் நிர்மலா சீதாராமன்.

கச்சா எண்ணெய் வினியோகம் செய்வதில் தடங்கள், போர் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்டவை 2 வாரங்களாக தான் நடந்து கொண்டிருக்கிறது. அதன் காரணமாக தான் கடந்த 8 நாட்களாக இங்கே விலை உயர்வு காணப்படுகிறது என தெரிவித்திருக்கிறார் நிர்மலா சீதாராமன்.

பெட்ரோலிய பொருட்களை குறைந்த விலையில் விற்பதற்காக 10 வருடங்களுக்கு முன்னர் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் எண்ணெய் நிறுவனங்களுக்கு 2 கோடி ரூபாய் மதிப்புள்ள எண்ணெய் பத்திரங்கள் விநியோகிக்க போட்டதாக தெரிவித்திருக்கிறார். அதோடு அவ்வாறு கொடுத்த பத்திரங்களுக்கு பொதுமக்கள் இப்போதும் பணம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 2026 ஆம் வருடம் வரையில் எண்ணெய் பத்திரங்கள் நீடிக்கும் என்பதால் இன்னும் 5 வருடங்களுக்கு மக்கள் பணம் செலுத்த வேண்டியிருக்கும் என தெரிவித்திருக்கிறார். வாஜ்பாய் ஆட்சிக் காலத்திலும் எண்ணெய் பத்திரங்கள் வெளியிடப்பட்டதாக தெரிவிக்கிறார்கள் அப்போது வெறும் 9,000 கோடி மதிப்புள்ள பத்திரங்கள்தான் வெளியிடப்பட்டது இரண்டிற்கும் வேறுபாடிருக்கிறது என தெரிவித்திருக்கிறார்.

டெல்லி அரசின் நிதிநிலை அறிக்கை குறித்து ஆம் ஆத்மி உறுப்பினர் சஞ்சய் சிங் புகழ்ந்து பேசினார் நிதிநிலை தாக்கல் செய்வது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவாலிடம் கற்றுக் கொள்ளுமாறு நிர்மலா சீதாராமனை அவர் கேட்டுக்கொண்டார்.

காவல்துறை, இராணுவம், வேளாண்மை உள்ளிட்ட துறைகளுக்கு டெல்லி நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்குவதில்லை அவையெல்லாம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன.அப்படிப்பட்ட சூழ்நிலையில் நிதிநிலை தாக்கல் செய்வது எளிதான காரியம்தான்.

கெஜ்ரிவால் அரசை புகழ்ந்து முழுப்பக்க விளம்பரங்களை கொடுத்திருக்கிறீர்கள் எனக்கு பாடம் நடத்துவதை விட்டுவிட்டு அந்த விளம்பர செலவுகளை காற்று மாசு பிரச்சனைக்கு பயன்படுத்துங்கள் என்று இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Previous articleஅப்படியா செய்தி இல்லை இல்லை இது ஏமாற்றும் செயல்! ரஷ்யாவின் பதிலுக்கு அமெரிக்கா கடும் தாக்கு!
Next articleமுதல்வரின் டெல்லி பயணம் நோக்கம் என்ன? உண்மையான காரணம் இதோ!