நள்ளிரவு முதல் வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த மத்திய அரசு!

0
113

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்திருக்கிறது தமிழ்நாட்டிலுள்ள சுங்க சாவடிகளில் நள்ளிரவு முதல் 5 முதல் 120 ரூபாய் வரை கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது என சொல்லப்படுகிறது.

நள்ளிரவு 12 மணிக்கு பிறகு தமிழக சுங்க சாவடிகளை கடந்த வாகனங்களில் உயர்த்தப்பட்ட கட்டணம் வசூலிக்கப்பட்டது இதனை அறியாத சில வாகன ஓட்டிகள் சுங்க சாவடி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை அடுத்து சரக்கு வாகனங்களுக்கான சுங்க கட்டணம் அதிகரித்திருப்பதால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது என பலரும் தெரிவித்து வருகிறார்கள்.

சுங்கக் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என சரக்கு வாகனங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

Previous articleஇந்தியாவிற்கு வந்த ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர்! காரணம் இதுதான்!
Next articleதமிழகத்தில் நோய்த்தொற்று இல்லாத அந்த 7 மாவட்டங்கள்!