தேசிய புலனாய்வு முகமையின் மும்பை பிரிவுக்கு வந்திருக்கின்ற இமெயிலில் ஒரு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பிரதமர் நரேந்திரமோடியை கொல்வதற்கு சதி நடந்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து மத்திய பாதுகாப்பு படைகள் உஷார்படுத்தப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன.
அந்த இமெயில் அனுப்பிய நபர் தான் தற்கொலை செய்து கொள்வேன் என்றும், இதனால் சாதி தொடர்பான விவரங்கள் வெளியே தெரியாது என்றும், அந்த இ-மெயிலில் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
பிரதமர் நரேந்திர மோடியை கொள்வதற்காக 20 ஸ்லீப்பர் செல்கள் ஆக்டிவேட் செய்யப்பட்டிருப்பதாகவும், அவர்களிடம் சுமார் 20 கிலோ அளவுக்கு ஆர்டிஎக்ஸ் வெடி பொருட்கள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
சதித் திட்டத்திற்கான தொடக்க கட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் இறுதி கட்ட வேலைகளை செயல்படுத்த ஸ்லீப்பர் செல்கள் காத்திருப்பதாகவும், கூறப்பட்டுள்ளது.இ-மெயிலில் குறிப்பிடப்பட்டுள்ள தகவலினடிப்படையில் இந்த சதித் திட்டத்தில் பல்வேறு தீவிரவாத அமைப்புகள் இடம்பெற்றிருப்பதாக தேசிய புலனாய்வு முகமை மும்பை பிரிவுக்கு வந்திருக்கின்ற இந்த மின்னஞ்சல் விசாரணைக்காக மேலும் சில அமைப்புகளுக்கு பகிரப்பட்டிருக்கிறது.
சைபர் கிரைம் அமைப்பு மின்னஞ்சல் வந்த ஐபி முகவரியை கண்டுபிடித்து தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள தீவிரம் காட்டி வருகிறது.பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டிருக்கும் பல அதிரடி நடவடிக்கையால் அவர் சர்வதேச அளவில் செல்வாக்கு மிக்க மற்றும் மதிப்பு மிக்க தலைவராக திகழ்ந்து வருகிறார்.அதோடு உலக வல்லரசு நாடாக இந்தியா அவர் தலைமையிலான அரசின் கீழ் வேகமாக வளர்ந்து வருகிறது.
அத்தோடு தீவிரவாத செயல்களுக்கு எதிராக இந்தியா எப்போதும் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது இதற்கு கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற பாலக்கோடு விமான தாக்குதலே சாட்சி.
பிரதமர் நரேந்திர மோடியின் தீவிரவாதத்திற்கு எதிரான பல அதிரடி நடவடிக்கைகள் காரணமாக தீவிரவாத இயக்கங்கள் அனைத்தும் அதிர்ச்சியில் இருந்து வருகின்றன. ஆகவே அவரை எப்படியாவது கொலை செய்ய வேண்டும் என்று அந்த தீவிரவாத அமைப்புகள் சதித்திட்டம் தீட்டியதன் ஒரு பகுதிதான் இந்த ஈமெயில் என்று சொல்கிறார்கள்.