வரும் 30 ஆம் தேதி இந்த இரு முக்கிய மாவட்டங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்!

0
133

தமிழகத்தில் மழைக்காலங்கள் தொடங்கிவிட்டால் பல இடங்களில் வெள்ளம் வடியாமல் அப்படியே நின்று விடுகிறது. இதன் காரணமாக, அந்தந்த பகுதியில் இருக்கக்கூடிய குடியிருப்புவாசிகள் கடுமையான பாதிப்பை சந்திக்கிறார்கள்.

இந்த நிலையில், சமீபகாலமாக நீர்நிலைகள் உள்ளிட்டவற்றை ஆக்கிரமிப்பு செய்து குடியிருப்புகளை கட்டியிருக்கும் நபர்கள் மற்றும் நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து விளைநிலங்களாக மாற்றியிருக்கும் நபர்கள் உள்ளிட்டோரை கண்டறிந்து அவர்கள் ஆக்கிரமிப்பு செய்திருக்கும் நிலங்களை மீட்டு மீண்டும் நீர்நிலையாக மாற்றும் முயற்சியில் மாநில அரசு இறங்கியிருக்கிறது.

இந்த நிலையில், தற்சமயம் இது முதல்வர் ஸ்டாலின் அவர்களின் நேரடி பார்வையில் நடைபெற்று வருவதாகவும், சொல்லப்படுகிறது.

ஆகவே தமிழகத்தில் மழை நீர் வடிகால், அரசு திட்ட பணிகள் உட்பட பல்வேறு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இந்த பணிகள் பல மாவட்டங்களிலும் முழுவீச்சில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில், எதிர்வரும் 30ஆம் தேதி தேனி மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார் என தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் பயணத்தின்போது திண்டுக்கல், தேனி, உள்ளிட்ட மாவட்டங்களில் முடிவுற்றுயிருக்கும் திட்டப்பணிகளை ஆரம்பித்து வைத்தும், பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கவுள்ளார்.

Previous articleடெல்லியில் மறுபடியும் அதிகரிக்க தொடங்கியது நோய்த்தொற்றுப்பரவல் ஏற்பட உண்மைக் காரணம் இதுதான்!
Next articleதடைசெய்யப்பட்ட வான்வெளியில் பறந்த விமானம்! பீதியில் அமெரிக்க நாடாளுமன்றம்!