மேல்நிலை மற்றும் உயர்நிலை வகுப்பு மாணவர்களுக்கு இன்று தொடங்கும் முக்கிய தேர்வு! தமிழகம் முழுவதும் பரபரப்பு!

0
119

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வந்த நிலையில், சென்ற 2 வருட காலமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருந்தனர். அதோடு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

சென்ற வருடம் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போதைய அரசாங்கம் இந்த கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு கட்டாயமாக நடைபெறும் என்று தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு பெறுகின்ற 6ம் தேதி ஆரம்பமாகி 30ஆம் தேதி முடிவடைகிறது. அத்துடன் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வருகின்ற 5 ஆம் தேதி ஆரம்பமாகி மே மாதம் 28ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.

இவ்வாறான சூழ்நிலையில், 10, 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் ஏப்ரல் மாதம் 25ஆம் தேதியான இன்றைய தினம் தமிழகம் முழுவதும் ஆரம்பமாகி நடைபெறவுள்ளது.

மே மாதம் 2ஆம் தேதி வரையில் நடைபெறும் இந்த தேர்வை மாநிலம் முழுவதும் சுமார் 19 லட்சம் மாணவர்கள் எழுதுகிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

மாணவர்களுடைய எண்ணிக்கைக்கு ஏற்றவாறு ஒவ்வொரு மாவட்டத்திலும் பல கட்டங்களாக தேர்தல் நடைபெறவிருக்கின்றன. சென்னையில் 30,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வில் பங்கேற்கிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

தேர்வுத் துறை பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியிருக்கிறது, வழக்கமாக 3 மணிநேரம் நடத்தப்படும் செய்முறைத்தேர்வு பள்ளிகளின் பரிந்துரையினடிப்படையில், நடப்பாண்டு முதல் 2 மணிநேரமாக குறைக்கப்பட்டுள்ளது.

சுமார் 2 வருடங்களுக்கு பிறகு செய்முறை தேர்வில் மாணவர்கள் பங்கேற்பதால் மாணவர்கள் அனைவரும் உற்சாகமாக காணப்படுகிறார்கள்.

Previous articleகள்ள காதலால் வந்த வினை! மகன் செய்த செயலால் தந்தை பரிதாபம்!
Next articleபெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே அதிகாலையில் நடைபெற்ற கோர விபத்து! 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் பரிதாப பலி!