மகிழ்ச்சி! இந்தியாவில் இன்று சற்றே குறைந்த தினசரி நோய் தொற்று பாதிப்பு!

0
94

கடந்த 2 ஆண்டு காலமாக நோய்த்தொற்று பரவாமல் இந்தியாவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது மெல்ல, மெல்ல, நோய் தொற்று குறைந்து வந்தது.

இதற்கு காரணம் இந்தியாவில் பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருந்தது தான் என்று சொல்லப்படுகிறது.

இந்தநிலையில், நோய்த்தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து வழக்கம் போல இந்தியாவில் அனைத்து விதமான பணிகளும் நடைபெற்று வருகின்றன. ஆனால் திடீரென்று இந்த நோய்த்தொற்று பரவல் தற்போது அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.

இந்த சூழ்நிலையில், இந்தியாவில் தினசரி நோய் தொற்று பாதிப்பு குறித்த விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது.

அதனடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2541 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 2,593 விட குறைவு என்று சொல்லப்படுகிறது.

ஆகவே நாட்டில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 4,30,60,086 என் அதிகரித்திருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து 1862 பேர் குணமடைந்திருக்கிறார்கள். இதன் காரணமாக, நாட்டில் நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தவரின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 4,25,21,341 என அதிகரித்திருக்கிறது.

அதோடு நாடு முழுவதும் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 16,522 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நோய்த்தொற்று தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 30 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

இதன் காரணமாக, இந்தியாவில் நோய் தொற்றால் பலியானோரின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 5,22,223 என அதிகரித்திருக்கிறது.

அதேசமயம் நாடுமுழுவதும் இதுவரையில் 187,71,95,781 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியிருக்கிறது.

Previous articleஐபிஎல் கிரிக்கெட் போட்டி! நேருக்கு நேர் சந்திக்கும் சென்னை பஞ்சாப் அணிகள் பழிதீர்க்குமா சென்னை அணி?
Next articleகஞ்சா கடத்தல் தலைவனுடன் பிரியாணி விருந்து! வைரலாகும் புகைப்படம்!