வளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் கணேசன் என்ற மாணவனுக்கு தற்சமயம் பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வந்திருக்கிறது. அந்த சமயத்தில் கணேசனின் பெற்றோரை அழைத்த பள்ளி நிர்வாகம் தங்களுடைய மகன் கடந்த வருடமே தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவித்தது.
ஆகவே இந்த வருடம் தேர்வு எழுத வேண்டிய அவசியமில்லை என்று ஆசிரியர்கள் தெரிவித்தார்கள். இதன் காரணமாக, மாணவன் கணேசன் மற்றும் அவருடைய பெற்றோர் குழப்பமடைந்தனர். அப்போதுதான் கடந்த வருடமே மாணவர் கணேசன் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றது தெரிய வந்தது.
நோய் தொற்று காரணமாக, எல்லோரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு சார்பாக அறிவித்திருந்த நிலையில், மாணவர் கணேசனை அரசு மேல்நிலைப் பள்ளி நிர்வாகம் மீண்டும் 10ம் வகுப்பிலேயே சேர்த்து அதிகரித்திருக்கிறது என தெரிவிக்கப்படுகிறது.
அதோடு மாணவன் கணேசனும் தான் தேர்ச்சி பெற்றது கூட தெரியாமல் பத்தாம் வகுப்பிலேயே கல்வி பயின்று கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்படுகிறது.