நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் நோய் தொற்று பாதிப்பு! அதிர்ச்சியில் மக்கள்!

0
203

கடந்த 2 ஆண்டு காலமாக நோய்த்தொற்று பரவல் இந்தியாவில் அதிகரித்து வந்தது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில, அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.

இருந்தாலும் இந்த நோய் தொற்று அவ்வளவு எளிதில் கட்டுக்குள் வருவதாக தெரியவில்லை. ஆகவே இந்த நோய்த் தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகளை கண்டுபிடிப்பதில் மத்திய, மாநில. அரசுகள் தீவிரம் காட்டினர்.

ஆகவே நாட்டிலுள்ள தகுதியான அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. இந்த நோய்த்தொற்று மெல்ல, மெல்ல, குறைந்து வந்தது.

நோய்த்தொற்று இந்தியாவில் மெல்ல, மெல்ல, குறைந்து வந்த சூழ்நிலையில், வடமாநிலங்களில் நோய்த்தொற்று பாதிப்பு தற்போது அதிகரித்து வருகிறது.

நேற்று முன்தினம் 3,303 பேருக்கும் இந்த பாதிப்பு உண்டானது. நேற்று மேலும் 3,377 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டது.

இப்படியான நிலையில், இன்று புதிதாக 3 ,688 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்த தகவலினடிப்படையில் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,688 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆகவே இதன் மூலமாக நோய் தொற்று பாதிப்பு மொத்த எண்ணிக்கை 4,30,75,864 என அதிகரித்திருக்கிறது.

அதேபோன்று நோய்த்தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 50 பேர் பலியாகியிருக்கிறார்கள். இதனால் உயிரிழந்தோரின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 5,23,803 என அதிகரித்திருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து 2,755 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார்கள். இதனால் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 4,25,33,377 என அதிகரித்திருக்கிறது.

அதோடு நோய்த்தொற்றுக்கு தற்போது 18,684 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என சொல்லப்படுகிறது. நாட்டில் இதுவரையில் 1,88,89,90,935 பேருக்கு நோய்த்தொற்று தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதற்கு நடுவே நாட்டில் நோய்தொற்று பாதிப்பை கண்டறிவதற்கான நேற்று ஒரே நாளில் 4,96,640 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும், இதுவரையில் ஒட்டுமொத்தமாக 83,74,42,023 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்திருக்கிறது.

Previous articleஆப்கானிஸ்தான் விரைவில் விடுதலை பெறும்! முன்னாள் ராணுவ தளபதி சூளுரை!
Next articleஅடேய் 90ஸ் கிட்ஸ் சாபமெல்லாம் உங்களை சும்மா விடாதுடா! பள்ளி வளாகத்திலேயே மாணவிக்கு தாலி கட்டிய மாணவன்!