போக்குவரத்துத் துறை தொழிலாளர்கள் வைத்த அதிரடி கோரிக்கை! சமாளிப்பாரா அமைச்சர்?

0
156

திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து போக்குவரத்துத் துறை மிகப்பெரிய வருவாய் இழப்பை சந்தித்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. ஏனென்றால் திமுக அரசு பொறுப்பேற்றவுடன் அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் என்ற அறிவிப்பை வெளியிட்டது. இதன் காரணமாக போக்குவரத்து துறை மிகப்பெரிய பாதிப்பை சந்தித்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

எப்போதும் பேருந்தில் அதிகக் கூட்டம் இருப்பதே பெண்களால் தான் ஆனால் தற்போதும் அந்த கூட்டம் இருக்கிறது. இருந்தாலும் கூட பெண்களுக்கு இலவச பயணம் என்று அறிவித்ததன் காரணமாக, போக்குவரத்து துறைக்கு சரியான வருமானம் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்காக 3 வருடத்திற்கு ஒரு முறை ஊதிய உயர்வு ஒப்பந்தமிடப்படுவது வழக்கம். கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1ம் தேதி புதிய ஓய்வூதிய ஒப்பந்தம் ஏற்பட்டிருக்க வேண்டும்.

நோய்த்தொற்று பரவல் போன்ற பல்வேறு காரணங்களை முன்வைத்து ஊதிய உயர்வு உடன்பாடு ஏற்படாமல் தள்ளிப்போனது. 2 வருட காலமாக போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை, ஆகவே அதனை வழங்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்கள் போக்குவரத்து தொழிற் சங்கத்தை சார்ந்தவர்கள்.

இந்த சூழ்நிலையில், 4வது கட்ட ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நேற்று சென்னை குரோம்பேட்டை பயிற்சி மைய வளாகத்தில் நடைபெற்றது. போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் இந்த பேச்சுவார்த்தை நடந்தது என தெரிவிக்கப்படுகிறது.

போக்குவரத்துத் துறை செயலாளர் கோபால், நிதித்துறை கூடுதல் செயலாளர் சுந்தர் தயாளன், ஊதிய பேச்சுவார்த்தை கன்வீனரும் மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனருமான அன்பு ஆபிரஹாம், உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலை வகித்தார்கள் என்று சொல்லப்படுகிறது.

தொமுச தொழிற்சங்க பொதுச்செயலாளர் சண்முகம், பொருளாளர் நடராஜன், அண்ணா தொழிற்சங்க பேரவை மாநில செயலாளர் கமலக்கண்ணன், தாடி ராசு, சி.ஐ.டி.யு தொழிற்சங்க செயலாளர் சௌந்தரராஜன் ஏ ஐ டி யு சி ஆறுமுகம் ஐ.என்.டி.யூ.சி விஷ்ணு பிரசாத் போன்ற 65 தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்றார்கள்.

இந்த பேச்சுவார்த்தையின்போது போக்குவரத்து ஊழியர்கள், தொழிற்சங்கங்களின் பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அதிகபட்சமாக 5 சதவீதம் வரையில் ஊதிய உயர்வு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். நீண்டகால பதவிக்காக காத்திருப்போருக்கு பதவியுயர்வு வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சூழ்நிலையில், போக்குவரத்துத்துறை நல்ல முறையில் சென்று கொண்டிருப்பதாகவும், எடுத்தவுடனேயே கோரிக்கை குறித்து உடன்படிக்கைக்கு அமைச்சர் வந்திருக்கிறார் என்றும், சி.ஐ.டி.யு தொழிற்சங்க செயலாளர் சௌந்தரராஜன் தெரிவித்திருக்கிறார்.

Previous articleஐபிஎல் கிரிக்கெட் போட்டி பிளே ஆப் சுற்றில் வாய்ப்பை இழந்த சென்னை அணி! சோகத்தில் ரசிகர்கள்!
Next articleஇலங்கையில் வரும் 17ஆம் தேதி விவாதிக்கப்படும் நம்பிக்கையில்லாத் தீர்மானம்! பதவியில் நீடிப்பாரா கோத்தபய ராஜபக்சே?