மேஷம்
இன்று தங்களுக்கு பாகப்பிரிவினை சுமுகமாக முடிவடையும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும், கடந்த இரு தினங்களாக வராமலிருந்த பண வரவு இன்று கைக்கு வரலாம்.
ரிஷபம்
இன்று தங்களுக்கு நன்மைகள் நடைபெற நரசிம்மரை வழிபட வேண்டிய நாள். அடுத்தவர் நலனில் அக்கறை காட்டுவீர்கள், எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நண்பர்கள் உதவி புரிவார்கள்.
மிதுனம்
இன்று தங்களுடைய நம்பிக்கைகள் யாவும் நடைபெறும் நாள். வீட்டுப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும் வியாபார விருத்திக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்கள் தங்களை விட்டு விலகிச் செல்வார்கள்.
கடகம்
இன்று சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும் நாள். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். வாரிசுகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும் விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவார்கள்.
சிம்மம்
இன்று தங்களுக்கு நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். நீண்ட நாள் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும், வாகன மாற்றம் தொடர்பாக சிந்திப்பீர்கள் குடும்பத்தினர்களின் குறைகளை தீர்க்க முயற்சி செய்வீர்கள்.
கன்னி
இன்று தங்களுக்கு வழக்குகளில் திசை மாற்றம் உண்டாகும் நாள். உள்ளம் மகிழும் செய்தி உடன்பிறப்புகள் மூலம் கேட்கலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்குவீர்கள்.
துலாம்
வெளிநாட்டு முயற்சியில் அனுகூலம் உண்டாகும். உங்களுடைய பொறுமைக்கேற்ற பெருமை கிடைக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகளை வரவழைத்துக் கொள்ள ஆன்மீக வழிமுறைகளை மேற்கொள்வீர்கள்.
விருச்சகம்
முக்கிய புள்ளிகளின் சந்திப்பு காரணமாக, முன்னேற்றம் ஏற்படும் நாள். நிதிநிலைமை அதிகரிக்கும். விலையுயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் ஏற்படும் பயணத்தால் பலன் கிடைக்கும் தொழிலில் லாபம் கிடைக்கும்.
தனுசு
இன்று தங்களுக்கு விடியற்காலையிலேயே விரயம் உண்டாகும். ஆனால் பொருளாதார முன்னேற்றம் கருதி வெளியூர் பயணங்களை மேற்கொள்ள நேரிடும், உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் தொல்லைகள் வரலாம். மருத்துவச் செலவு அதிகரிக்கும்.
மகரம்
இன்று தாங்கள் மகிழ்ச்சியான வாய்ப்புகளை சந்திக்கும் நாள். உத்தியோகத்தில் புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும், எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும், விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவார்கள்.
கும்பம்
இன்று தங்களுக்கு மனச்சுமை குறைய வழிபாட்டை முன்னெடுக்க வேண்டிய நாள். அடகு வைத்த நகைகளை மீட்டு கொண்டு வரும் வாய்ப்பு கிடைக்கும், உத்தியோகத்தில் உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும்.
மீனம்
இன்று வரவை விட செலவு அதிகரிக்கும் நாள். குடும்பத்தில் இருப்பவர்களால் குழப்பங்கள் ஏற்படும், ஆரோக்கியம் தொடர்பான விதத்தில் அச்சுறுத்தல் உண்டாகும், உத்தியோகத்தில் வீண் பழிகள் வரலாம்.