திருமண தடை நீக்கும் நாகம்மன் கோவில்!

0
288

தற்போதுள்ள காலகட்டத்தில் திருமணம் நடைபெறுவதென்றால் குதிரை கொம்பாக தான் இருக்கிறது.
ஒரு காலத்தில் பெண்ணுக்கு மாப்பிள்ளை கிடைப்பதில்லை என்ற சூழ்நிலை இருந்தது, ஆனால் தற்சமயம் மாப்பிள்ளைக்கு பெண் கிடைக்கவில்லை என்று சூழ்நிலை இருந்து வருகிறது.

அனைத்தும் கூடி வந்தாலும் ஜாதகம் சரியில்லை, தோஷமிருக்கிறது போன்ற எண்ணற்ற பிரச்சனைகளால் திருமணங்கள் தடைப்பட்டு விடுகின்றனர்.அந்த வகையில், இன்று திருமணத்தடை நீக்கும் ஒரு அற்புத கோவிலை பற்றி காண்போம்.

அதாவது திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் இருக்கிறது அழகிய நாகம்மன் கோவில் இங்கு இருக்கின்ற மக்களுக்கு வேண்டிய வரம் கொடுத்து காத்தருகிறாள் அன்னை நாகம்மன் இதன் காரணமாக, நாள்தோறும் இங்கு வந்து அம்மனை வழிபட ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.

வேடசந்தூர் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இங்கு வந்து பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்கிறார்கள். வேண்டியதை நிறைவேற்றி பக்தர்களின் துக்கங்களை போக்கி அருள்பாலித்து வருகிறார், அன்னை நாகம்மன் இங்கு மூலவராக நாகம்மன் அருள்பாலித்து வருகிறார்.

பில்லி ,சூனியம், ஏவல், இவற்றை நீக்கும் தெய்வமாக நாகம்மன் விளங்குகிறார். கோவிலின் தல விருட்சமாக வேப்ப மரமும், அரச மரமும், இருக்கின்றன .

தலவிருட்சத்தை சுத்தி வந்து அதில் மாங்கல்யம் கட்டி தொங்கவிட்டால் திருமணத்தடை நீங்கும், திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். இதன் காரணமாக, ஏராளமான கன்னிப் பெண்கள் இங்கே வந்து அம்மனை வழிபட்டு தளத்தில் மாங்கல்யம் கட்டி செல்கிறார்கள் என சொல்லப்படுகிறது.

ஆனால் அடுத்த வருடமே அவர்களுக்கு திருமணமாகி கணவருடன் இங்கு வந்து அம்மனை தரிசனம் செய்து செல்கிறார்கள், கலியுக அதிசயமாக இது நடைபெற்று வருகிறது.

நாகம்மன் கோவிலில் நாபாசதுர்த்தியன்று சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. நாகதோஷம் நீங்க பலரும் இங்கு வந்து வழிபாட்டில் பங்கேற்று கொள்கிறார்கள்.

Previous articleநீங்கள் இந்த ராசிக்காரர்களா சற்றே கவனமாக இருங்கள்!
Next articleமாவட்ட சுகாதார சங்கத்தில் அரசு வேலைவாய்ப்பு! உடனே விண்ணப்பியுங்கள்!