தோஷமும் பரிகாரமும்!

Photo of author

By Sakthi

தோஷமும் பரிகாரமும்!

Sakthi

மனிதனின் அடிப்படைத் தேவைகளாக இருக்கும் உணவு, உடை, இருப்பிடம், உள்ளிட்டவை இல்லாமல் மிகுந்த வறுமை நிலையில் இருப்பவர்கள் அரிசியில் சர்க்கரை கலந்து எறும்பு புற்றுக்கு சர்க்கரையிட்டு வந்தால் பொருளாதார குற்றம் நீங்கும் என்கிறார்கள்.

பிறந்த நாள் முதல் தாயை பிரிந்து வாழும் குழந்தைகள், தாயிடம் மிகுதியாக கருத்துவேறுபாடுகள் உள்ளவர்கள், தாய்வழி முன்னோர்களிடம் கருத்துவேறுபாடு உள்ளவர்களுக்கு மாதுர் தோஷம் மிகுதியாக இருக்கும் என்கிறார்கள்.

ஆனால் இவர்கள் பவுர்ணமி மற்றும் வளர்பிறை பஞ்சமி திதியில் தாயின் வயதிலிருக்கும் பெண்களுக்கு 1 கிலோ நெல் அல்லது பச்சரிசி உள்ளிட்டவற்றை தானமாக வழங்கி ஆசி பெற்றால் தோஷம் நிவர்த்தி பெறும்.

கண் திருஷ்டி, செய்வினை கோளாறு, தீராத கடன், நோய் பகை, உள்ளிட்டவைகள் இருப்பவர்கள், நாள்தோறும் மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலான பிரதோஷ காலங்களில் லட்சுமி நரசிம்மரை வழிபட்டால் நல்ல மாற்றம் உண்டாகும்.

எத்தகைய கிரக தோஷமாக இருந்தாலும் வீட்டு பூஜை அறையில் நாள்தோறும் சுந்தர காண்டத்தில் ஒரு அத்தியாயம் பாராயணம் செய்வது மிக மிக நன்று.

பல தலைமுறை, தலைமுறையாக, தொடர்ந்து வரும் வழக்கு காரணமாக, அவதிப்படுபவர்கள் வியாழக்கிழமை மதியம் 1 மணி முதல் 3 மணி வரையிலான ராகு காலத்தில் பிரத்யங்கிரா தேவியை வழிபட அந்த வழக்கிலிருந்து பூரணமாக விடுதலை கிடைக்கும்.

அடிக்கடி மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருபவர்கள், நோய், கடன் வாங்குபவர்கள், உள்ளிட்டோர் சனிக்கிழமை குளத்திற்கு இரை போட்டு வந்தால் விரயம் குறைவதற்கான வாய்ப்புண்டு நோய் தீரும்.

பல வருட காலமாக திருமண தடையை சந்தித்து வருபவர்கள் தீர்க்கமுடியாத விவாகரத்து வழக்கு காரணமாக, அவதிப்பட்டு வருபவர்கள், மேலும் திருமண வாழ்வில் அதிக சிரமங்களை சந்திப்பவர்கள், வாழ்க்கை துணையால் பயனில்லாதவர்கள் உள்ளிட்டோர் ஸ்ரீ வாராஹி அம்மனை வெள்ளிக் கிழமைகளில் வழிபட்டு வர அனைத்து சுபங்களும் தேடி வரும் மங்களம் ஏற்படும்.

தங்களுடைய பூர்வீக குல தெய்வம் தெரியாதவர்கள் வெள்ளிக்கிழமை மாலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் நெய் தீபமேற்றி, சர்க்கரை பொங்கல் படைத்து தீபத்தை குலதெய்வமாக பாவனை செய்து வேண்டிய வரம் கேட்க வேண்டிய வரம் கிடைக்கும் , குலதெய்வம் தொடர்பிலான தகவலும் கிடைக்கும்.