ஆயுள் பலம் அதிகரிக்க சனி வார விரதத்தை கடைபிடிக்கும் முறை!

0
136

ஜோதிடத்தில் 12 ராசிகள் 12 கிரகங்கள் உள்ளிட்டவை இருக்கின்றன. இதில் சனி கிரகத்தை ஆட்சி செய்யும் பெருமாளே இந்த சனி கிரகத்திற்கு அதிபதி என சொல்லப்படுகிறது.

சனிக்கு அதிபதியான பெருமானை நினைத்து அவருக்கு உகந்த நாளான சனிக்கிழமைகளில் விரதம் மேற்கொண்டால் அவர்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்கிறார்கள்.

அதிலும் ஆயுள் பலம் அதிகரிக்க சனி விரதம் தோன்றிய மிகவும் உகந்தது என சொல்கிறார்கள். இவ்வாறான ஐஸ்வர்யங்களை அள்ளித்தரும் சனிக்கிழமை விரதத்தை ஆரம்பிக்க ஒவ்வொரு மாதத்தின் வளர்பிறையில் வரும் சுக்கிலபட்ச முதல் சனிக்கிழமையில் ஆரம்பிப்பது என்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்.

இப்படி ஆரம்பமாகும் சனிக்கிழமை விரதத்தை 11 வாரங்கள் முதல் 52 வாரங்கள் வரை தொடர்ந்து கடைபிடித்து வந்தால் அவருடைய பாவங்கள் விலகி நற்பலன்கள் கிடைக்கும்.

அதிலும் விசேஷமாக பெருமாளுக்கு உரிய புரட்டாசி மாதங்களில் வரும் சனிக்கிழமைகளில் விரதத்தை மேற்கொண்டால் அது ஒரு வருடத்திற்கான நற்பலன்களை உங்களுக்கு வழங்கும் என்கிறார்கள்.

சனிவார விரதம் என்பது எளிதான ஒன்றாகும் என சொல்லப்படுகிறது. காலையில் எழுந்து குளித்துவிட்டு பூஜை செய்து அதன் பிறகு காலை மற்றும் மதிய வேளைகளில் எந்த உணவு வகைகளையும் உண்ணாமல் பால், பழம், தண்ணீர், உள்ளிட்டவற்றை மட்டும் குடித்து விரதத்தை முன்னெடுக்க வேண்டும்.

அதன் பிறகு மாலையில் சனி பகவானுக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். அதன் பிறகு இரவு வேளை மட்டும் ஏதாவது ஒரு எளிமையான உணவை சாப்பிட்டு விரதத்தை முடித்துக் கொள்ளலாம். அதேபோல சனிக்கிழமை தினங்களில் அசைவத்தை தவிர்த்து விடுதல் என்பது மிகவும் நற்பலன்களை தரவல்லது.

அதோடு மட்டுமல்லாமல் சனிக்கிழமைகளில் மாலை சமயத்தில் கோவிலுக்கு சென்று சனி பகவானுக்கு கருப்பு வஸ்திரம் சாத்தி கருப்பு வஸ்திரம் மற்றும் வேகவைத்த சாதம் போன்றவற்றை படைத்து தீபமேற்றி வழிபட்டு வந்தாலும் தங்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும் என்கிறார்கள்.

Previous articleஇந்த ராசிக்காரர்களுக்கு இன்று எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்!
Next articleவேலை தேடுகிறீர்களா தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலைவாய்ப்பு! அறிவிப்பு உடனே விண்ணப்பியுங்கள்!