தமிழகத்தில் பல சிவாலயங்கள் இருந்தாலும் சிதம்பரத்தில் இருக்கும் சிவாலயத்திற்கு தனிப்பெருமை உண்டு. மூலவரும், உற்சவரும் ஒருவராகவே இருப்பது வேறு கதை என்றாலும் எங்கும் காணாத அதிசயமாக இருக்கிறது. அதே போல காரைக்குடி கொப்புடை நாயகி அம்மன் ஆலயத்திலும் மூலவரும் உற்சவரும் ஒன்றே.
இன்னொரு சிறப்பம்சம் இங்கே இருக்கிறது. கருப்பண்ணசாமி குதிரையின் மேல் அமர்ந்த நிலையில் அருள் பாலித்து வருகிறார். பொதுவாக காளி, துர்க்கை, போன்ற உக்கிரமான தெய்வங்கள் வடக்கு நோக்கித் தான் இருப்பார்கள். ஆனால் இங்கு அம்பாள் கிழக்கு திசையில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
குழந்தைப் பேறு வேண்டி வரும் பெண்களுக்கும் திருமணத்தடையை போக வேண்டும் என வருபவர்களுக்கும் கண்கண்ட தெய்வமாக திகழ்கிறாள் காரைக்குடி கொப்புடையம்மன்.
இதனை தவிர்த்து சிறு வியாபாரிகள் முதல் வர்த்தக பிரமுகர்கள் வரை புதிதாக தொழில் ஆரம்பித்தால் தொழில் அபிவிருத்தி செய்ய வேண்டும் என்றாலும் இந்த கொப்புடையம்மனைத்தான் வணங்கி வழிபட்டுச் செல்கிறார்கள். கேட்டபவருக்கு கேட்ட வரங்களை வாரி வழங்கும் தாயாக கொப்புடையம்மன் திகழ்கிறாள்.
காரைக்குடி நகரின் நடுவில் கோவில் அமைந்திருப்பது ஒரு தனிச் சிறப்பாக பார்க்கப்படுகிறது. கோவிலின் நுழைவாயிலில் உள்ள ராஜ கோபுரம் மூன்று நிலைகளுடனும் உயர்ந்து நிற்கிறது.
அம்மனின் அருள் பெற உள்ளே நுழைந்ததும் சோபன மண்டபம் காட்சியளிக்கிறது. இடப்புறம் விநாயகர் சன்னதியும், வலது கருத்துரையும் இருக்கின்றன. வலப்புறம் வண்ண மயில் வாகனன் தண்டாயுதபாணியாக அருள்பாலித்து வருகிறார்.
ஒரு காலத்தில் இந்தப் பகுதி முழுவதும் வனப்பகுதியாக இருந்ததாக சொல்லப்படுகிறது. இதில் காரை மரங்கள் அதிகம் வளர்ந்திருந்தன. அவற்றை சமன்படுத்தி மக்கள் குடியேறியதால் காரைக்குடி என்று அழைக்கப்படுகிறது என சொல்லப்படுகிறது.
காரைக்குடியில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவிலிருக்கிறது சஞ்சய் சங்கராபுரம் அங்கே காட்டம்மன் கோவில் கொண்டிருக்கிறார்.
இங்குள்ள காட்டம்மனும் கொப்புடை நாயகியும் அக்கா தங்கை என சொல்லப்படுகிறது. காட்டம்மனுக்கு 7 குழந்தைகள் கொப்புடை நாயகி பிள்ளைகள் எதுவும் இல்லை என சொல்லப்படுகிறது.
அவ்வாறு இருக்க அக்காளின் குழந்தைகளை பார்ப்பதற்காக அரிசி மாவில் செய்யப்பட்ட கொழுக்கட்டைகள் செய்து எடுத்துக் கொண்டு தங்கை பாசத்துடன் சென்று பார்த்து வருவது வழக்கம். ஆனால் அக்காளுக்கோ புத்தி கோணலாக வேலை செய்தது என சொல்லப்படுகிறது.
தன்னுடைய தங்கை தன்னுடைய பிள்ளைகளை பார்க்க அடிக்கடி வருவதை விரும்பவில்லை. அதனால் தான் குழந்தைகளை ஒளித்து வைத்துவிட்டு அக்காவிடம் நலம் விசாரித்துக் கொண்டிருந்தார்.
இதை குறிப்பால் உணர்ந்து கொண்ட கொப்புடை நாயகி ஒளித்து வைக்கப்பட்ட குழந்தைகளை இனி பார்க்க வர மாட்டேன் என்று தெரிவித்து உக்கிரமாக போய் அமர்ந்துவிட்டார்.
அக்கா தன்னுடைய தவற்றை உணர்ந்து கலங்கித்தான் போனார். கொப்புடை நாயகி தன்னுடைய அக்காவை மன்னித்து அருளினார் என்பது இந்தக் கோவிலின் தலவரலாறாக இருக்கிறது.
ஆதிசங்கரர் தன்னுடைய ஸ்ரீ சக்கரத்தை வைத்து வழிபட்ட தலம் என்பதால் இந்த ஆலயத்திற்கு அருகில் வரும்போதே இதன் ஆகர்சன சக்தியை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். காரைக்குடியின் காவல் தெய்வம் கொப்புடை நாயகி அம்மன் காரைக்குடிக்கு மட்டுமல்லாமல் தென்மாவட்ட மக்களுக்கு வளங்களைக் கொடுத்து நலமுடன் காக்கும் நாயகியாக கொப்புடையம்மன் திகழ்கிறாள்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் கொப்புடையம்மன் கோவில் இருக்கிறது. இந்த தளத்தின் மூலவராகவும், உற்சவராகவும், கொப்புடை நாயகி அம்மன் அருள்பாலித்து வருகிறார்.
சிவன் தலங்களில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் தான் மூலவரும், உற்சவரும், ஒன்றாக இருக்கும். அதேபோல அம்மன் தலங்களில் மூலஸ்தானத்தில் இருக்கும் அம்மனே உற்சவ மூர்த்தியாக இருப்பது காரைக்குடி கொப்புடை நாயகி அம்மன் கோவிலில் தான். காவல் தெய்வம் கருப்பண்ணசாமி வேறெங்குமில்லாத கோலத்தில் குதிரையில் அமர்ந்தபடி இங்கு அருள்பாலித்து வருகிறார்.
சர்ம வியாதிகள், குழந்தைகள் பேறு இல்லாமை, போன்ற குறைபாடுகளினால் அவதிப்படுவோர் மற்றும் மணவாழ்வில் பல பிரச்சனைகளை சந்திப்போர் உள்ளிட்டவர்கள் எல்லோரும் வந்து வழிபட்டு அம்மனின் அருளை பெற்று தங்களுடைய பிரச்சினைகளில் இருந்து விடுபடுகிறார்கள். உடல்நலக்குறைவு காரணமாக, அவதிப்பட்டு வருவோர் இங்கு வந்து பிரார்த்தனை செய்து செல்கிறார்கள்.
சித்திரை மாதம் கடைசி செவ்வாய் கிழமை, செவ்வாய், பெண் ஆரம்பித்து வைகாசி மாதம் முதல் வாரம் முடிய 10 நாட்கள் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது சித்திரை மாதத்தில் நான்கு செவ்வாய் கிழமை வந்தால் அதில் இரண்டாவது ச…