தொழிலதிபர் ஒருவரிடம் குறைந்த விலையில் கைக்கடிகாரங்கள் மற்றும் செல்போன்கள் உள்ளிட்டவற்றை பெற்றுத் தருவதாக தெரிவித்து 6 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக ஹரியானா கிரிக்கெட் வீரர் மிர்னாங்க் சிங் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை செய்ததில் அவர் ரிஷப் பண்ட்டை ஏமாற்றியது தெரிய வந்திருக்கிறது.
ரிஷப் பண்ட் மற்றும் அவருடைய மேலாளர் புனித் உள்ளிட்டோரிடம் ஆடம்பர கடிகாரங்களை தள்ளுபடி விலையில் வாங்கலாம் என தெரிவித்து இந்த மோசடி நபர் அறிமுகமாகியுள்ளார்.
கடந்த வருடம் ஜனவரி மாதத்தில் மிருனாங்க் சிங் ஆடம்பர கைக்கடிகாரங்கள் கைகள் உள்ளிட்டவற்றை வாங்கி விற்கும் தொழிலை ஆரம்பித்ததாக கூறியிருக்கிறார்.
ஏற்கனவே பல கிரிக்கெட் வீரர்கள் இடம் பொருட்களை விற்றுள்ளதாக சில குறிப்புகளை அவர் காட்டி இருக்கிறார் என சொல்லப்படுகிறது. ஆடம்பர கைக்கடிகாரங்கள் மற்றும் நகைகளை தள்ளுபடி மற்றும் மிக குறைந்த விலையில் வாங்கிக்கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பிராங்க் முல்லர்,வான்கார்ட் யாச்சிங் சீரிஸ் உள்ளிட்ட கடிகாரங்களை வாங்குவதற்கு ரிஷப் பண்ட் விருப்பம் கொண்டுள்ளார்.
இதனை தள்ளுபடி விலையில் வாங்குவதற்காக மிருனாங்க்சிங்கிடம் கிரேசி கலர் வாட்ச் ஒன்றுக்கு 36,25,120 மற்றும் ரிச்சர்ட் மில்லே கடிகாரத்திற்கு 62,60,000 ரூ கொடுத்ததாக காவல்துறையின் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் 65 லட்சத்திற்கு வாங்கிய ஆடம்பர கைக்கடிகாரம் மற்றும் சில வகை பொருட்களை மிருனாங்கிடம் ரிஷப் பண்ட் கொடுத்ததாக காவல்துறையின் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. மொத்தமாக ரிஷப் பண்ட் கொடுத்த 1.63 கொடிக்கு பதிலாக மிருனாங்க் ஒரு காசோலையை வழங்கியிருக்கிறார்.
அந்த காசோலை செல்லாது என ஆனபிறகு தான் ஏமாந்த விஷயமே தெரியவந்திருக்கிறது. தற்போது காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்ற நிலையில், பிரபல சினிமா இயக்குனர் ஒருவரும் அவரிடம் பணத்தை பறிகொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.