நீங்க இந்த ராசியா? சற்றே கவனமாக இருங்கள்!

0
156

மேஷம்

இன்று தங்களுக்கு சகோதர உறவு மேம்படும் நாள். வீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்ச்சியடைவீர்கள். புதிய வாகனம் வாங்கும் திட்டம் நிறைவேறும், தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர்களை சந்தித்து மகிழ்ச்சியடைவீர்கள்.

ரிஷபம்

இன்று தங்களுடைய ஆதாயம் அதிகரிக்கும் நாள். ஆற்றல் மிக்கவர்கள் உங்களுடைய வேலைக்கு உறுதுணையாக இருப்பார்கள், விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் வாய்ப்பு கிடைக்கும் உடன்பிறப்புகள் மூலமாக உள்ளம் மகிழும் சம்பவம் நடக்கும்.

மிதுனம்

இன்று தங்களுக்கு ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். நண்பர்களிடையே நல்ல பெயர் கிடைக்கும்,குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்ச்சியடைவீர்கள், சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகி மனநிம்மதி உண்டாகும்.

கடகம்

கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்ச்சியடைவீர்கள், மனக்குழப்பம் நீங்கும், ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவத்தை நாடுவீர்கள் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருந்தவர்கள் விலகிச்செல்வார்கள்.

சிம்மம்

இன்று தாங்கள் வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். எதையும் யோசித்து செய்வது மிகவும் நன்று. குடும்ப உறுப்பினர்கள் உங்களை பற்றி குறை சொல்லலாம், பரிமாற்றத்தில் கூடுதல் கவனம் தேவை.

கன்னி

இன்று தங்களுக்கு இடமாற்றம் தொடர்பான சிந்தனை அதிகரிக்கும் நாள். திடீர் பயணம் காரணமாக, தித்திக்கும் செய்தி ஒன்று வந்து சேரலாம். வெளிவட்டார தொடர்பு விரிவடையும் வெளிநாட்டிலிருந்து அழைப்பு வரலாம்.

துலாம்

புதிய திருப்பங்கள் உண்டாகும் நாள். நண்பர்களின் ஒத்துழைப்புடன் தொழில் ஆரம்பிக்கும் திட்டங்களை நிறைவேற்றிக்கொள்வீர்கள். பொதுவாழ்வில் மதிப்பும், மரியாதையும், அதிகரிக்கும்.

விருச்சிகம்

இன்று தங்களுக்கு யோகமான நாள். பொருளாதார நிலை அதிகரிக்கும் பொன், பொருள், வாங்க வகுத்த திட்டம் நிறைவேறும். தொழில் வளர்ச்சி ஏற்படும், வருமானம் திருப்திகரமாக இருக்கும், வரன்கள் வாயில் தேடி வரும்.

தனுசு

இன்று உங்களுக்கு சான்றோர்களின் சந்திப்பு கிடைத்து மகிழ்ச்சியடைவீர்கள் திருமண முயற்சி கைகூடும். வருமானம் திருப்திகரமாக இருக்கும், பொதுவாழ்வில் புகழ் அதிகரிக்கும், காலை சமயத்தில் கலகலப்பான தகவல் வந்து சேரும்.

மகரம்

இன்று விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்து சேரும் நாள். வீடு மாற்றம், நாடு மாற்றம், தொடர்பாக சிந்தனை தோன்றும். எப்படி நடக்கும் என நினைத்த காரியம் நல்லவிதமாக நடந்தேறும் வழக்குகள் சாதகமாக முடிவடையும்.

கும்பம்

இன்று தங்களுக்கு பொருளாதார நிலை அதிகரிக்கும் நாள். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு கிடைக்கும். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகளும், பதவிகளும், தேடிவரும் வாரிசுகளால் பெருமை சேரும், பணவரவு இரு மடங்காக அதிகரிக்கும்.

மீனம்

இன்று தங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற ஆலயங்களுக்கு செல்ல வேண்டிய நாள். கொடுத்த வாக்கை கடைசி சமயத்தில் காப்பாற்றுவீர்கள், உத்தியோகத்தில் பழைய பிரச்சனைகள் மறுபடியும் தலைதூக்கும்.

Previous articleநான்காவது முறையாக இணையும் வெற்றி கூட்டணி! உறுதி செய்த அட்லீ
Next articleகடைசி நேர சஸ்பென்ஸ்! அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர் பட்டியல் வெளியீடு