பிரதமர் நரேந்திர மோடி எப்போது தமிழகத்திற்கு வந்தாலும் அவருடைய வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சமூக வலைதளங்களில் #gobackmodi என்ற ஹேஸ்டேக் ட்ரெண்ட் செய்யப்படுவது வழக்கமாக நடைபெற்று வருகிறது.
அதிலும் திமுகவைச் சேர்ந்தவர்கள் தான் இந்த செயலை அதிகம் செய்கிறார்கள் என்று திமுக எதிர்க்கட்சியாக இருந்த சமயத்தில் தமிழகம் முழுவதும் பரவலாக பேசப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது தமிழகத்தில் திமுக ஆட்சி கட்டிலில் அமர்ந்திருக்கிறது. அதனால் அந்த கட்சியை சேர்ந்தவர்களுக்கு மோடியின் வருகை எதிர்க்கும் விதமாக எந்த செயலையும் செய்ய வேண்டாம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக இன்றைய தினம் சென்னைக்கு வருகை தருகிறார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ரவி, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கவிருக்கிறார்கள்.
.
பிரதமரின் வருகைக்கு எந்தவிதமான எதிர்ப்பும் தெரிவிக்க கூடாது என்று முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்த நிலையில், நேற்று முதலே வலைதளத்தில் #gobackmodi என்ற ஹேஷ் டேக் ட்ரெண்ட் ஆக தொடங்கியுள்ளது.
இன்று இந்திய அளவில் அந்த ஹாஷ்டேக் முதலிடம் வகிக்கிறது. தமிழக பாஜகவின் சார்ந்தவர்கள் #VanakkamModi என ட்ரெண்ட் செய்ய முயற்சி செய்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் #gobackmodi முதலிடத்தில் இருந்து வருகிறது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையைப் போல வேடிக்கையான திட்டங்கள் தேவையில்லை நீட் தேர்வு விலக்கு கிடைக்கும் வரையில் #gobackmodi தான் இது பிரதமர் மோடிக்கு எதிரானது கிடையாது. மாறாக ஆர்எஸ்எஸ் மற்றும் இந்துத்துவா கொள்கைகளுக்கு எதிரானது.
தமிழர்களுக்கு இந்து மற்றும் இந்துத்துவா கொள்கைகளுக்கு எதிரானது. தமிழர்களுக்கு இந்து மற்றும் இந்துத்துவாவுக்கு இடையிலான வித்தியாசம் நன்றாகவே தெரியும் உள்ளிட்ட கருத்துக்களும் இதில் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.
என்னதான் இதில் திமுகவிற்கு எந்தவிதமான பங்கும் இல்லை என வெளியே காட்டிக் கொண்டாலும் கூட மறைமுகமாக இதனை திமுக ஆதரிக்கிறது என்று கருதப்படுகிறதென்றால் எப்போதும் இந்து மக்களுக்கும், இந்துத்துவா கொள்கைகளுக்கு எதிராகவும், பல இடங்களில் கருத்துக்களை பதிவு செய்வது திமுக மட்டுமே இது அனைவருக்கும் நன்றாகவே தெரியும்.
ஆனால் இப்படியான செயலை நாங்கள் செய்யவில்லை என்று திமுக சப்பைக்கட்டு கட்டிக் கொண்டிருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் நாங்கள் தான் தற்போது ஆளும் கட்சியாக இருக்கிறோமே இருந்தும் மோடிக்கு எதிர்ப்பு அலை தமிழகத்தில் இருந்து வருகிறதென்றால் உண்மையிலேயே மோடிக்கு தமிழகத்தில் வரவேற்பு இல்லை என இதன் மூலமாக தமிழக அரசு தற்போது மத்திய அரசுக்கு உணர்த்த முயற்சிக்கிறது என்றே தோன்றுகிறது.