ஆசிரியர்களுக்கு குட் நியூஸ் சொன்ன அரசு தேர்வுகள் இயக்ககம்!

0
206

தமிழ்நாடு முழுவதும் மேல்நிலை மற்றும் உயர்நிலை வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளை மாணவ, மாணவிகள், மிக உற்சாகமாக எழுதி வருகிறார்கள். இதில் 12ம் வகுப்பு மாணவர்களில் சில பாடப்பிரிவை சார்ந்த மாணவர்களுக்கு தேர்வுகள் தற்போது நிறைவு பெற்றுவிட்டன.

மற்ற மாணவர்களுக்கு வருகின்ற 28ம் தேதியுடன் தேர்வு நிறைவுபெறுகிறது, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு எதிர்வரும் 31 ஆம் தேதியும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற 30ஆம் தேதியும், தேர்வு முடிவுர இருக்கிறது.

இதில் 12ஆம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் அடுத்த மாதம் 2-ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரையில் நடைபெறவிருக்கிறது.

10ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த மாதம் 1ஆம் தேதி விடைத்தாள் திருத்தும் பணி ஆரம்பமாகிறது. 11வது வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த மாதம் 10ம் தேதி தொடங்கி 17ஆம் தேதி வரையில் நடைபெறும் என தெரிகிறது.

ஆசிரியர்கள் எந்தவிதமான மன உளைச்சலுக்கு ஆளாகாமல் விடைத்தாள் திருத்துவதற்கு ஏதுவாக பல சலுகைகளை அரசு தேர்வுகள் இயக்ககம் வழங்கியிருக்கிறது.

அதில் ஒன்று ஆசிரியர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகே உள்ள மையத்தில் விடைத்தாள் திருத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது, இது ஆசிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Previous articleடுவிட்டரில் திடிரென்று ட்ரென்ட் ஆகும் கோ பேக் மோடி! காரணம் யார்?
Next articleதொடரும் விலைவாசி உயர்வு! மத்திய அரசு எடுத்த முக்கிய நடவடிக்கை…!!