மேஷம்
நேற்றைய பிரச்சினை இன்று நல்லதொரு முடிவிற்கு வரும். தொழில் வளர்ச்சி நன்றாக இருக்கும். வாரிசுகளின் விருப்பங்களை நிறைவேற்ற கையிருப்பை செலவிடும் நிலை வரும் ஆரோக்கியம் சீராகும்.
ரிஷபம்
இன்று தங்களுக்கு நடைபெற்ற காரியம் தானாக நிறைவேறும் நாள். உறவினர்கள் வழியில் விரயம் ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் வாராக் கடன்கள் கைக்கு வரும், திருமணக் கனவுகள் நனவாகும்.
மிதுனம்
இன்று தங்களுக்கு தொலைபேசி வழியே இனிமையான தகவல் வந்து சேரும் நாள். நண்பர்கள் செய்த உதவியை மறக்காமல் நன்றியுடன் நடந்து கொள்வீர்கள். வாரிசுகளின் முன்னேற்றம் திருப்தி தரும் விதமாக இருக்கும் பொருளாதார பற்றாக்குறை நீங்கும்.
கடகம்
இன்று தங்களுக்கான வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும். வருமானமும், விரயமும், சமமாக இருக்கும். வாகன மாற்ற சிந்தனைகள் மேலோங்கும். சுபச்செய்திகள் வரலாம். வாரிசுகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.
சிம்மம்
இன்று தாங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும், பொதுவாழ்வில் புகழ் அதிகரிக்கும், தொழில் வளர்ச்சியில் இருந்த தொந்தரவுகள் நீங்கும்.
கன்னி
இன்று தாங்கள் எதிலும் யோசித்து செயல்பட வேண்டிய நாள். விரயங்கள் அதிகரிக்கும், வாகனங்களால் வருத்தம் கொள்வீர்கள். உத்யோகத்தில் முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும்போது கவனத்துடன் இருப்பது மிகவும் நல்லது.
துலாம்
இன்று தங்களுக்கு தேக்க நிலை மாறி தெளிவு பிறக்கும் நாள். முக்கிய புள்ளிகள் உங்களுடைய முன்னேற்றத்திற்கு வழி செய்து தருவார்கள். வரவு திருப்திகரமாக இருக்கும் உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும்.
விருச்சிகம்
இன்று தங்களுக்கு வளர்ச்சிகள் அதிகரிக்கும் நாள். செல்லுமிடங்களில் சிந்தனை பலம் காரணமாக, குடும்பத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான அறிகுறிகள் தென்படலாம். உத்தியோகத்தில் கூடுதலான பொறுப்புகள் வந்து சேரலாம்.
தனுசு
இன்று தங்களுக்கு வெற்றி செய்திகள் கிடைக்கும் நாள். வீடு மாற்ற சிந்தனை அதிகரிக்கும் வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் ஏற்படும். வளர்ச்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் வரன்கள் வாயில் தேடி வரும்.
மகரம்
இன்று தங்களுக்கு மனதிற்கினிய சம்பவம் தங்களுடைய இல்லத்தில் நடைபெறும் நாள். மகிழ்ச்சியான பயணம் மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர், உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிடைக்கும், கட்டிட பணி ஆரம்பமாகும்.
கும்பம்
இன்று தங்கள் சுறுசுறுப்புடன் பணிபுரியும் நாள். நிர்வாகத் திறமைக்கு பாராட்டுக்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதியம் தொடர்பான இனிமையான தகவல் வந்து சேரும், ஊர்மாற்றம் எதிர்பார்த்தபடி அமையும்.
மீனம்
இன்று தங்களுக்கு திருமண தடை நீங்கும் நாள். அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்ள முயற்சி செய்வீர்கள். விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்து சேர்வார்கள், தொலைபேசி வழியே அனுகூலமான தகவல்கள் வந்து சேரும்.