இந்த நாடு பாதுகாப்பாக இருப்பதற்கு நீங்கள் தான் காரணம் மத்திய அமைச்சர் பாராட்டு!

Photo of author

By Sakthi

கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்திலுள்ள கடற்படை தளத்திற்கு வருகை தந்த மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்திய கடற்படை வீரர்களுடன் கலந்துரையாடினார் என சொல்லப்படுகிறது.

அப்போது அவர் உரையாற்றியதாவது, உலகில் இந்தியா தொடர்பாக இருந்து வந்த கருத்து தற்போது மாறி வருகிறது. முன்பெல்லாம் இந்தியாவை சர்வதேச அரங்கில் பெரிதாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள்.

இன்று உலகம் இந்தியாவின் பேச்சை உற்று நோக்கி வருகிறது. இதற்கு உங்களுடைய பங்களிப்பு மற்றும் நம்முடைய பிரதமர் நரேந்திர மோடியின் தலைமை தான் காரணம் என தெரிவித்துள்ளார்.

இது ஒரு சிறிய சாதனை அல்ல அமெரிக்கா உள்ளிட்ட மிகப் பெரிய நாடு இந்தியாவுடன் ஒன்றிணைந்து பணியாற்ற விரும்புமளவிற்கு ஒரு பெரிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், நம்முடைய பாதுகாப்பு படைகள் மீது நாடு மரியாதை வைத்திருக்கிறது. அவர்கள் தற்போது பாதுகாப்பான கரங்களில் இருப்பதாக திருப்தி அடைகிறார்கள் என கூறியிருக்கிறார்.

சீன ராணுவத்தினர் அத்துமீறியபோது இந்திய ராணுவ வீரர்கள் கொடுத்த பதிலடி காரணமாக, ஒவ்வொரு இந்தியரும் தலைநிமிர்ந்து நிற்கிறார்கள். இந்த நாடு பாதுகாப்பாக இருப்பதற்கு நீங்கள் தான் காரணம் என்று அவர் கூறியிருக்கிறார்.