மருத்துவர் இராமதாஸ் அவர்களால் தொடங்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி கடந்த 30 ஆண்டுகளில் தொடர்ந்து மக்கள் பணியாற்றி வருகிறது.
30 ஆண்டுகளுக்கு மேலாக எந்த கட்சியும் எப்படியாவது தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்று கடுமையாக முயற்சித்து வருகின்றனர்.
அந்த கட்சிக்கு இளைஞர்கள் மத்தியில் மிகுந்தஆதரவு இருந்து வருகிறது. ஆனாலும் அந்த கட்சி தற்போது வரையில் ஆட்சியில் அமர முடியவில்லை.
இதற்கு உண்மையான காரணம் என்றால் திராவிட கட்சிகள் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி மக்களின் மனதைக் கவர்ந்து ஆட்சியை கைப்பற்றிவிடுகின்றன.
ஆனால் நிதர்சனத்தை உணர்ந்து கொண்ட பாட்டாளி மக்கள் கட்சியும், அதன் தலைவர்களும் பொதுமக்களுக்கு எந்த மாதிரியான திட்டங்களை கொண்டு வந்தால் அவர்கள் முன்னேறுவார்கள் என்பதை ஆழ்ந்து சிந்தித்து செயல்படுவதால் தானோ என்னவோ தெரியவில்லை, இது வரையில் அந்த கட்சி ஆட்சியை பிடிப்பது கடினமாகவே இருந்து வருகிறது.
திராவிடக் கட்சிகளைப் பொறுத்தவரையில் வளர்ச்சித் திட்டங்களை விட கவர்ச்சியான திட்டங்கள்தான் அதிகமாக கையாளப்படுகிறது.
ஆனால் பாட்டாளி மக்கள் கட்சி கொண்டுவரும் திட்டங்கள் கவர்ச்சியானதாக இல்லாமல் இருந்தாலும் கூட அதனை உற்று நோக்கினால் அந்த திட்டத்தில் பல வளர்ச்சிகள் இருக்கும் என்பதில் எந்தவிதமான ஐயப்பாடும் இல்லை.
இந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியை மாநில தலைவராக ஜிகே மணி கடந்த 25 ஆண்டு காலமாக திகழ்ந்து வந்தார். அதோடு அவர் பல முறை சட்டசபை உறுப்பினராக பதவி வகித்து அதன் மூலமாக மக்களுக்கு பல நன்மைகளையும், பயனுள்ள திட்டங்களையும், பெற்றுத்தந்திருக்கிறார்.
இந்த நிலையில், 25 ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக ஜிகே மணி அந்த கட்சியை வழிநடத்நடத்தினார். அதை போற்றும் விதத்தில் சமீபத்தில் அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அந்த கட்சிக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று ஏற்கனவே கட்சியின் இளைஞரணி தலைவராக இருக்கின்ற டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு தலைவர் பதவி வழங்கவேண்டும் என்று கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும், வலியுறுத்தி வந்தார்கள்.
இந்த சூழ்நிலையில், அன்புமணி தலைவராக தேர்வு செய்வதற்கான சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. பொதுக்குழுவில் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா, வன்னியர் சங்க தலைவர் பு.த. அருள்மொழி, பேராசிரியர் தீரன், தேர்தல் பணி குழுத் தலைவர் ஏ.கே. மூர்த்தி, சமூக முன்னேற்ற சங்க தலைவர் சிவப்பிரகாசம் மற்றும் மாநில, மாவட்ட, நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், உள்ளிட்டோர் பங்கேற்று கொண்டார்கள்.
இந்த கூட்டத்தில் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களை தலைவராக தேர்வு செய்வதற்கான தீர்மானம் முன்மொழியப்பட்டது.
அதனை பொதுக்குழு உறுப்பினர்கள் ஏகமனதாக ஏற்றுக் கொண்டார்கள். இதனை தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யப்படுவதாக ஜிகே மணி அறிவித்தார். 25 ஆண்டு காலமாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அவர் தான் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புமணியை கண்ணீர் மல்க கட்டித்தழுவி பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வாழ்த்துக்களை தெரிவித்தார், அன்புமணி தலைவராக அறிவிக்கப்பட்டவுடன் கூட்டத்தில் இருந்தவர்கள் கரகோஷம் எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
மத்திய மாவட்ட செயலாளர்கள் கே எம் சி நகர் தலைவர் அனந்த கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் அன்புமணிக்கு ஆளுயர மாலை அணிவித்து வெள்ளி வாள் பரிசளித்தனர்.
இதனை தொடர்ந்து முக்கிய நிர்வாகிகள் அன்புமணிக்கு சால்வைகள், மாலைகள், உள்ளிட்டவற்றை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்கள். அன்புமணியை வாழ்த்தி 2.o என்ற விளம்பரங்கள் பளிச்சிட்டன.
ஆளப் போகிறான் பாட்டாளி 2026ல் அன்புமணி தலைமையில் ஆட்சி அமைப்போம் என்று கோஷம் எழுப்பினார்கள் தொண்டர்கள்.
25 ஆண்டு காலமாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக இருந்து வந்த கட்சியை பொதுசேவையுடனும், நேர்மையுடனும், வழிநடத்தி வந்த ஜிகே மணி அவர்களுக்கு கட்சியின் முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என்று பலராலும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.