பாதுகாப்பான நகரம் சென்னை! இன்றிரவு நடைபெறும் சைக்கிள் பேரணி!

Photo of author

By Sakthi

பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது பாலின வேறுபாடு இல்லாமல் பெண்கள் பொது இடங்களில் வரும் பெண்களின் பாதுகாப்பு அனைவருடைய பொறுப்பு என்பதை உணர்த்தும் விதத்திலும், சிங்காரச் சென்னை 2.o வீதி விழாவின் ஒரு பகுதியாக பாதுகாப்பான சென்னை என்ற கருத்தை வலியுறுத்தி பெண்களுக்கான இரவு நேரம் சைக்கிள் ஓட்டும் நிகழ்ச்சி இன்று இரவு 8 மணி முதல் 9 மணி வரையில் சென்னையில் 6 பகுதிகளில் தொடங்கி நடைபெற உள்ளது .

இந்த நிகழ்ச்சியை சென்னை மாநகர மேயர் தியாகராஜன் இந்திரா நகர் பறக்கும் ரயில் நிலைய நுழைவாயில் அருகே தொடங்கிவைத்து சைக்கிள் பேரணியில் பங்கேற்கிறார்.

இந்த சைக்கிள் பேரணி நேரு பூங்கா, மெட்ரோ ரயில் நிலையம், எல்ஐசி மெட்ரோ ரயில் நிலையம் ,அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம், மெரினா கடற்கரை, கலங்கரை விளக்கம், மெரினா நீச்சல் குளம், அருகே உள்ளிட்ட இடங்களில் ஆரம்பமாகி தியாகராயநகர் பாண்டிபஜாரில் இரவு 9 மணி அளவில் நிறைவடைகிறது. இந்த பேரணியில் பங்கேற்க விரும்பும் பெண்கள் இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.