களைகட்டிய ஐபிஎல் திருவிழா! அறிமுக போட்டியிலேயே கோப்பையை வென்று அசத்திய குஜராத் அணி!

Photo of author

By Sakthi

15வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா தற்போது நடைபெற்று வந்தது, இந்த தொடரில் எப்படியும் சென்னை மீண்டும் கோப்பையை கைப்பற்றும் என ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

ஆனால் அந்த அணி ப்ளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது இதனை தொடர்ந்து அடுத்தபடியாக மும்பை அணியின் மீது ரசிகர்கள் மிகப்பெரிய நம்பிக்கை கொண்டிருந்தார்கள். ஆனால் அந்த அணி கூட இறுதிச்சுற்றை நெருங்க முடியவில்லை.

இந்த நிலையில், இந்த ஐபிஎல் தொடரில் குஜராத் மற்றும் லக்னோ உள்ளிட்ட அணிகள் புதிதாக ஐபிஎல் தொடரில் இணைக்கப்பட்டது. அணிகளுடன் மெகா ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் 26ஆம் தேதி முதல் மே மாதம் 29ஆம் தேதி வரையில் நடந்து வந்தது இந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர்.

70வது லீக் ஆட்டங்கள் முடிவில் குஜராத், ராஜஸ்தான், பெங்களூரு, உள்ளிட்ட 4 அணிகள் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணியும், பலப்பரீட்சை நடத்தினர்.

சுமார் 1,32000 பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கக்கூடிய மைதானம் என்பதால் அகமதாபாத் நகரமே கிரிக்கெட் ரசிகர்களால் ஸ்தம்பித்துப்போனது.

நோய்த்தொற்றிலிருந்து மீண்டு விட இந்த விளையாட்டு உலகில் நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நிறைவு விழா கண்கவர் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் களைகட்டத் தொடங்கியது.

பிரமாண்டமான ஐபிஎல் ஜெர்ஸி மைதானத்தில் காட்சிப்படுத்தப்பட்டது, உலகிலேயே மிகப்பெரிய ஜெர்ஸி என்ற கின்னஸ் சாதனையில் இடம் பிடித்தது.

அதோடு 1983 திரைப்பட பாடல் இசைக்க ரன்வீர் கபூர் ஐபிஎல் கொடியை ஏந்தி மைதானத்தில் வலம் வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

இந்திய அணி உலகக் கோப்பையை வென்ற தருணங்கள், சேவாக் 3 சதங்களை அடித்த தருணம், சச்சின் அடித்த இரட்டை சதங்கள், உள்ளிட்ட மறக்கமுடியாத நிகழ்வுகள் ஒளிபரப்பப்பட்டன. இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசை கச்சேரி மைதானத்திலிருந்த எல்லோரையும் மகிழ்ச்சியில் உறைய வைத்தது.

ஜெய்ஹோ என்ற பாடலுக்கு ரன்வீர் சிங்குடன் சேர்ந்து மைதானமே ஆட்டம் போட்டது. தமிழ் மீது அதிக பற்று கொண்ட ஏ.ஆர். ரகுமான் இந்த நிகழ்ச்சியில் தமிழில் பாடி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை வழங்கியதுடன் பேசுபொருளாகவும் மாறிப்போய்விட்டது.

இப்படி வண்ணமயமான வாணவேடிக்கை நிகழ்ச்சியுடன் நடப்புச் சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி ஆரம்பமானது.

இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அடித்து விளையாட நினைத்த ராஜஸ்தான் வீரர்கள் ரன் சேர்ப்பதில் கவனத்துடன் இருந்து விக்கெட்டுகளை பறி கொடுத்து விட்டார்கள்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் 39 ரன்களில் வெளியேற மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர், கேப்டன் சஞ்சு சாம்சன் 14 ரன்கள் மட்டுமே சேர்த்தார் என சொல்லப்படுகிறது.

ஹர்திக் பாண்டியா மிகவும் அற்புதமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார், அதோடு தமிழகத்தைச் சார்ந்த சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார், அத்துடன் ராஜஸ்தான் அணியை 130 ரன்னுக்குள் வெளியேற்றினார்.

131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்கத்தில் சட்டையை தடுமாற்றத்தை சந்தித்தது.

விருத்திமான் சஹா மற்றும் வாடே உள்ளிட்டோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கச் கில் அவர்களும், ஹர்திக் பாண்டியா சுதாரித்து மிகவும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 34 ரன்கள் சேர்த்து ஹர்திக் பாண்டியா ஆட்டமிழக்க டேவிட் மில்லர் தன்னுடைய அதிரடியால் ஆட்டத்தை முடித்து வைத்தார்.

தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி மிகவும் நிதானமாக விளையாடி ரன் சேர்த்த சுப்மன் கில் கடைசிவரையில் ஆட்டமிழக்காமலிருந்து 45 ரன்களை சேர்த்து அசத்தினார்.

கடைசியில் 11 பந்துகளில் மீதமிருக்கும் நிலையிலேயே குஜராத் அணி தன்னுடைய வெற்றி இலக்கை எட்டி சாதனை படைத்தது. அதோடு சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

பங்கேற்ற முதல் தொடரிலேயே சாம்பியன் கோப்பையை வென்று ஹர்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி சாதனை படைத்திருக்கிறது.

 

பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என அனைத்திலுமே ஜொலித்த ஹர்திக் பாண்டியா கேப்டனாக சாதித்து தலைசிறந்த ஆல்ரவுண்டர் பட்டியலில் தன்னை இணைத்துக்கொண்டார்.

கடைசி போட்டியின் கதாநாயகனாக ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்பட்டார், பவுண்டரி, சிக்சர்கள், ஆரஞ்ச் கேப் என கோப்பைகளை வாங்கி குவித்தார் ஜோஸ் பட்லர்.

17 போட்டிகளில் விளையாடிய ஜோஸ் பட்லர் 4 சதம், 4 அரைசதம், உள்ளிட்டவற்றை விளாசி சாதனை படைத்து 163 ரன்கள் குவித்து ஆரஞ்சு நிற தொப்பியை தன்வசப்படுத்தினார் இதில் 83 பவுண்டரி, 45 சிக்சர்கள், அடக்கம் என்கிறார்கள்.

நடப்பு தொடரில் அதிக விக்கெட் கைப்பற்றியவர்களுக்கு வழங்கப்படும் பர்மிள் கேப் இந்த முறை இது ராஜஸ்தான் அணியின் வீரர் சாஹல் கைப்பற்றினார், அவர் 17 போட்டிகளில் விளையாடி 27 விக்கெட்டுகளை கைப்பற்றினார் என்று சொல்லப்படுகிறது.

2வது இடத்தைப் பிடித்த ராஜஸ்தான் அணிக்கு 12.5 கோடி ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டது. சாம்பியன் கோப்பையை கைப்பற்றிய குஜராத் அணிக்கு கோப்பையுடன் 20 கோடி ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.

சென்னை அணி பட்டம் வெல்லவில்லை என்றாலும் கூட சாம்பியன் பட்டம் வென்ற குஜராத் அணியில் தமிழக வீரர் சாய் கிஷோர் அசத்தியது, ரன்னர் அப் டீமில் அஸ்வினின் ஆட்டம், உள்ளிட்டவை தமிழக ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இருந்தது.