ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் மாநில காவல்துறையினர் ஒன்றிணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.
இந்த சூழ்நிலையில், காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் கண்டிவாரா பகுதில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அந்தப் பகுதியில் பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர், அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதற்கு பாதுகாப்பு படையினர் தரப்பில் எதிர் தாக்குதல் நடத்தப்பட்டது, நேற்று இரவு முதல் இன்று காலை வரையில் நீடித்த இந்த மோதலில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார்.
அந்த பகுதியில் மேலும் சில பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக துப்பாக்கிச்சண்டை நீடித்து வருவதாக சொல்லப்படுகிறது.
மேலும் கொல்லப்பட்ட பயங்கரவாதி ஜெய்ஷ்-இ- முகமது அமைப்பைச் சார்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் காஷ்மீர் மாநிலம் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது மற்றும் காஷ்மீரின் சிறப்பு அதிகாரம் ரத்து செய்யப்பட்டது.
உள்ளிட்ட நிகழ்வுகளுக்குப் பிறகு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளின் தாக்குதல் சற்றே குறைந்து காணப்பட்டது. அதோடு காஷ்மீர் உடன் இணைந்திருந்த லடாக் பகுதி தனியாக பிரிக்கப்பட்டதிலிருந்து தீவிரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவுவது குறைவாகவே காணப்பட்டது. ஆனால் தற்போது இன்று ஊடுருவல் சம்பவம் நடைபெற்று இருக்கிறது.