இத்தாலியில் சீறும் எட்னா எரிமலை! உலக வெப்பமயமாதல் அதிகரித்தல் அறிகுறியா?

0
164

தற்போதிருக்கின்ற சூழ்நிலையில், உலகளவில் வெப்பமயம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, உலகில் இருந்த சமநிலை மாறி வருவதாக சொல்லப்படுகிறது. விஞ்ஞான ரீதியாக பார்த்தோமானால் இந்த உலகம் வெப்பமயமாதல் அதிகரித்து வருவது உலகிற்கு அவ்வளவு நல்லதல்ல.

இந்த உலக வெப்பமயமாதலை தடுக்கும் விதமாக அமெரிக்கா, இந்தியா, உள்ளிட்ட உலக வல்லரசு நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஒரு கூட்டமைப்பை உருவாக்கி இந்த உலக வெப்பமயமாதலை தடுப்பது எப்படி என்று வருடம் தோறும் ஆலோசனை செய்து வருகிறது.

இந்த நிலையில், தற்போது ரஷ்யா தன்னுடைய அண்டை நாடான உக்ரைன் மீது கடுமையான போர் தொடுத்து வருகிறது.

ஆகவே இந்தப் போர் மூலமாக உலக வெப்பமயமாதல் இன்னும் அதிகரிப்பதற்கான வாய்ப்பிருக்கிறது. ஆகவே உக்ரைனின் நிலைமையை கருத்தில் கொண்டும், உலக வெப்பமயமாதல் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டும், ரஷ்யா தயவுசெய்து போரை நிறுத்த வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

இப்படியான நிலையில், இத்தாலியின் மவுண்ட் எட்னா எரிமலையிலிருந்து நெருப்புக் குழம்பாக வழிந்தோடும் காட்சிகள் வெளியாகி இருக்கின்றன. ஐரோப்பாவின் மிக உயரமான மற்றும் உயிர்ப்புள்ள எளிமையான மவுண்ட் எட்னா கடந்த சில தினங்களாக சீறி வருகின்றது.

3,330 மீட்டர் உயரமுள்ள இந்த எரிமலையிலிருந்து லாவா குழம்பு வழிந்து ஓடும் நிலையில், லாவாவின் வெப்பநிலை 700 முதல் 800 டிகிரி செல்சியஸை ஒட்டி இருப்பதாக தெரிகிறது.

Previous articleஓஹோ இதுதான் திராவிட மாடல் ஆட்சியா? திமுகவை செமையாக கலாய்த்த அண்ணாமலை
Next articleசென்னையில் பரபரப்பு! தலைமைச் செயலகம் அருகே தீக்குளிக்க முயற்சி செய்த முதியவர்!