சென்னை திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு நிர்மலா நகர் பகுதியை சேர்ந்த பொன்னுசாமி என்ற முதியவர் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியருக்கு 14 லட்சம் ரூபாய் கடனாக கொடுத்திருக்கிறார்.
இதனை அவர் திரும்பி கேட்டபோது அந்த ரயில்வே ஓய்வுபெற்ற ஊழியர் வாங்கிய கடனை கொடுக்க மறுத்திருக்கிறார். இதனால் அந்த முதியவர் கடுமையான மன உளைச்சலில் இருந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று சென்னை தலைமைச் செயலகம் அருகே உள்ள பேருந்து நிலையத்தில் அந்த முதியவர் திடீரென்று மண்ணெண்ணையை தன்னுடைய உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
இதனை கண்ட பொதுமக்கள் மற்றும் பயணிகள் உள்ளிட்டோர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதற்கு நடுவே அருகில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் விரைந்து வந்து முதியவரின் முதலில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து அவரை மீட்டனர்.
இதனைத் தொடர்ந்து அவரை அவசர ஊர்தி மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து காவல்துறையினர் தங்களுடைய விசாரணையை தொடங்கி இருக்கிறார்கள்.
காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையின் பேரில் தான் மேலே சொல்லப்பட்ட தகவல்கள் அனைத்தும் தெரிய வந்திருக்கிறது.
அதோடு அந்த முதியவர் வைத்திருந்த ஒரு பையில் ஒரு மனுவும் இருந்திருக்கிறது. அந்த மனுவில் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் ஒருவருக்கு 14 லட்சம் ரூபாய் கடனாக கொடுத்ததாகவும், அதை அவர் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வருவதாகவும், அதனை வாங்கி கொடுக்க வேண்டும் என்றும், குறிப்பிடப்பட்டிருந்தது.
அதேபோல அவர் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வருவதாகவும், அதனை வாங்கி கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது.