இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் விக்ரம் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
இவர்களுடன் சூர்யா, அர்ஜுன் தாஸ், நரேன் காளிதாஸ், ஜெயராம், உள்ளிட்டோர் முக்கியமான வேடங்களில் நடித்திருப்பதாக சொல்லப்படுகிறது.
கிளைமாக்ஸ் காட்சிகளின் போது சூர்யா திரைப்படத்தில் இடம் பெறுவார் எனவும், இந்த காட்சியை விக்ரம் திரைப்படத்தின் அடுத்த பாகங்களுக்கு ஒரு குறியீடாக அமையும் என்றும், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார். இதன்காரணமாக, திரைப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிகமிக அதிகரித்தது.
இந்த சூழ்நிலையில், இன்று அதிகாலையிலேயே இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்களின் மத்தியில் பல சுவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
இந்த திரைப்படம் தொடர்பாக ரசிகர்கள் வலைப்பதிவில் பலவிதமாக பதிவிட்டிருக்கிறார்கள் அவர்களுடைய விமர்சனங்கள் என்ன?பாராட்டுக்கள் என்ன? என்பதை இந்தப் பதிவில் நாம் காணலாம்.
ஆனாலும்கூட இந்த திரைப்படம் திரைக்கு வருவதற்கு முன்னரே திரை ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமாக இருந்து வந்தது. இன்ஸ்டாகிராமில் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உள்ளிட்டவை வைரலாகி பொதுமக்களிடையே இந்த திரைப்படம் பரபரப்பை உண்டாக்கியது.
பொதுவாக திரைக்கு வருவதற்கு முன்னரே எந்த திரைப்படமாக இருந்தாலும் சரி அந்த திரைப்படத்தை பற்றி ஆஹா, ஓஹோ, என்று பேசிக் கொண்டால் திரைக்கு வந்த பின்னர் அந்த திரைப்படம் மிகவும் சொற்ப தினங்களே ஓடும் விதமாக அமையும் என்பது கடந்த கால வரலாறு.
இதற்கு தற்போதைய உச்ச நட்சத்திரங்களான அஜித், விஜய், இதற்கு முன்பு திரைப்படங்களில் கொடிகட்டிப் பறந்த ரஜினி உள்ளிட்ட நடிகர்களும் விதிவிலக்கல்ல.
ஆனால் இந்த திரைப்படம் திரைக்கு வருவதற்கு முன்னரே பொதுமக்களிடையே மிகவும் பிரபலமடைந்து விட்டது. ஆகவே இந்த திரைப்படம் எப்படி இருக்கும் என்பதை காண்பதற்காக ரசிகர்கள் பொதுமக்கள் என்று அனைத்து தரப்பினரும் ஆர்வமாக இருந்து வந்தார்கள்.
தற்போது இந்த திரைப்படத்தின் கதை எவ்வாறு இருக்கிறது என்பதை ரசிகர்கள் தங்களுடைய வலைப் பதிவின் மூலமாக விமர்சனம் செய்திருக்கிறார்கள் அதனை நாம் காணலாம்.
https://help.twitter.com/en/twitter-for-websites-ads-info-and-privacy
https://help.twitter.com/en/twitter-for-websites-ads-info-and-privacy
https://help.twitter.com/en/twitter-for-websites-ads-info-and-privacy
https://help.twitter.com/en/twitter-for-websites-ads-info-and-privacy