மாநிலங்களவைத் தேர்தல்! போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட அந்த 41 பேர்!

0
144

மாநிலங்களவைக்கு மிக விரைவில் காலியாகயிருக்கின்ற 57 இடங்களுக்கு எதிர்வரும் 10ம் தேதி தேர்தல் நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆகவே இதற்காக பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ், உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பாக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வேட்புமனுத்தாக்கல் நடைபெற்று வந்தது.

இதற்கு நடுவே வேட்புமனு பரிசீலனை முடிந்து திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது.

இப்படியான நிலையில், 41 பகுதிகளில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். இதில் அதிகபட்சமாக பாஜகவிற்கு 14 இடங்கள் கிடைத்திருக்கின்றன.

காங்கிரஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், உள்ளிட்ட கட்சிகள் 4 இடங்களையும், திமுக, பிஜூ ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் தலா 3 இடங்களையும், ஆம் ஆத்மி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், தெலுங்கானா ராஷ்டிர சமிதி, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தலா 2 இடங்களையும் பெற்றிருக்கின்றன.

அதோடு ஜார்கண்ட் முக்தி மோட்ச ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாடி, ராஷ்டிரிய லோக் தளம், உள்ளிட்ட கட்சிகள் தலா 1 இடத்தையும், அதோடு சுயட்சை ஒருவரும் வெற்றி பெற்றிருக்கிறார்.

வெற்றி பெற்றவர்களில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கபில்சிபல், லாலுபிரசாத் மகள் மிசாபாரதி, பாஜகவின் சுமித்ரா வால்மீகி, கவிதா, உள்ளிட்டோர் முக்கியமானவர்கள் என்று சொல்லப்படுகிறது.

Previous articleரஷ்யாவுடன் வர்த்தகத் தொடர்பு! மேலை நாடுகளின் எதிர்ப்பை நிராகரித்த இந்தியா!
Next articleஇங்கிலாந்து நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி! இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளிய நியூஸிலாந்து அணி!