நடுநடுங்கும் திமுக! சாட்டையை சுழற்றும் பாஜக!

Photo of author

By Sakthi

ஊழல் பட்டியலில் யார் பெயர் இடம்பெறப்போகிறது என்று திமுக அமைச்சர்கள் அச்சத்திலிருக்கிறார்கள் என்று பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார்.

திண்டுக்கல்லில் அவர் தெரிவித்ததாவது, மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆனால் திமுக மோசடி செய்துவருகிறது.

பெட்ரோல், டீசல், விலையை குறைப்பதற்காக வலியுறுத்தி மாவட்ட ரீதியாக போராட்டம், எழுச்சி பேரணி உள்ளிட்டவற்றை நடத்துவதற்கு நாங்கள் திட்டமிட்டிருக்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது 16% மட்டுமே இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்கள் விலையேற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

மத்திய அரசு இரு கட்டமாக பெட்ரோல் டீசல், விலையை குறைத்திருக்கிறது. உஜ்வாலா திட்டத்தின் கீழ் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தும் 9 கோடி மக்களுக்கு 200 ரூபாய் விலை குறைக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் திமுக அரசு தெரிவித்தபடி எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் கூட குறைக்கப்படவில்லை என்று அவர் குற்றம் சுமத்தியிருக்கிறார்.

திமுகவின் அரசை புறக்கணிப்பதற்கு பொதுமக்கள் தயாராகிவிட்டார்கள். தமிழகத்தில் குற்றவாளிகள் பெருகி வருகிறார்கள்.

கவல்த்துறைறையினர் கொலையாளிகளை கைது செய்யாவிட்டால் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விடும் என்பதற்காகவே கடந்த காலங்களைப்போல திமுக ஆட்சி கலைக்கப்படலாம்.

மக்களாட்சிலிருந்து மறுபடியும் மன்னராட்சியை திமுகவினர் குடும்ப ஆட்சியை நடத்தி வருகிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் வேகமாக வளர்ந்து வருகிறது. பாரதிய ஜனதா கட்சி வெளியிடவுள்ள ஊழல் பட்டியலில் யார் பெயர் வரப்போகிறது என்று தமிழக அமைச்சர்கள் அச்சத்திலிருக்கிறார்கள்.

இளைஞர்கள் அனைவரும் பாஜகவிற்கு சென்று விடுவார்களோ என்று திமுகவினர் மட்டுமல்லாமல் அனைத்து கட்சியை சார்ந்தவர்களும் கூட பயம் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.